சுவிஸ் தொழிலாளர்கள் தொடர்பில் பெடரல் புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட தகவல்
சுவிட்சர்லாந்த் தொழிலாளர்களில் மூன்றில் ஒருவர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என பெடரல் புள்ளியியல் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.
மட்டுமின்றி, 50-64 வயதிற்குட்பட்டவர்களுக்கான வேலையின்மை விகிதம் 25 மற்றும் 49 வயதுக்கு இடைப்பட்டவர்களை விட குறைவாக உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.
2020ல், 50 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய 1.65 மில்லியன் ஊழியர்கள் சுவிட்சர்லாந்தில் வசித்து வந்தனர், இது சுவிஸில் மொத்த உழைக்கும் மக்கள்தொகையில் 33.5% ஆகும்.
ஆனால் 1991ல் இந்த எண்ணிக்கையானது வெறும் 24% என்றே தெரிய வந்துள்ளது. சுவிஸில் 1945 மற்றும் 1964 காலகட்டங்களில் அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் பிறந்ததும், இதற்கு முக்கிய காரணமாக பெடரல் புள்ளியியல் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
2020ல் 50 முதல் 64 வயதுடைய தொழிலாளர்களில் 81.4% தொழில் ரீதியாக செயலாற்றி வந்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 50 முதல் 64 வயதுக்குட்பட்ட பத்தில் எட்டு பேர் தொழில் ரீதியாக ஐரோப்பாவின் சில நாட்டவர்களைவிட சுறுசுறுப்பாக இருந்ததும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஸ்வீடனில் இதே வயதுடைய 86 சதவீதம் பேர்கள் தொழில் ரீதியாக சுறுசுறுப்பாக இருந்துள்ளனர். மட்டுமின்றி, 50 முதல் 64 வயதுடையவர்களுக்கான வேலையின்மை விகிதமும் 25 முதல் 49 வயது வரையிலான தொழிலாளர்களுடன் ஒப்பிடும் போது சற்று குறைவாகவே உள்ளது.
ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களுக்கு வேலையின்மை விகிதம் குறைவாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.