பிரான்ஸ் தரப்பிலிருந்து பிரித்தானியாவுக்கு மீண்டும் ஒரு மிரட்டல்
பிரித்தானிய கடல் பரப்பில் மீன் பிடிக்க மேலும் அதிக உரிமங்கள் வழங்குவது தொடர்பாக அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில், பிரித்தானிய இறக்குமதிக்கு இடையூறு செய்ய இருப்பதாக வடக்கு பிரான்ஸ் மீனவர்கள் மிரட்டல் விடுத்துள்ளார்கள்.
பிரித்தானியாவுக்கும் பிரான்சுக்கும் இடையிலான மீன் பிடித்தல் பிரச்சினை முடிவுக்கு வருவது போல் தெரியவில்லை.
இரு நாடுகளுக்கும் இடையிலான உரசலைக் குறைக்கும் முயற்சியாக, பிரித்தானியா, சனிக்கிழமை மேலும் 23 பிரெஞ்சுப் படகுகளுக்கு மீன் பிடிக்க உரிமம் வழங்கியது.
ஆனாலும், பிரான்சுக்கு அது போதவில்லை. 80 படகுகளுக்காவது உரிமம் வேண்டும் என பிரான்ஸ் கருதுகிறது. ஆகவே, ஒரு கூட்டம் பிரெஞ்சு மீனவர்கள் தாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் நடவடிக்கைகளில் இறங்க இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.
இம்முறை, தங்கள் போராட்டங்கள் பிரித்தானிய இறக்குமதியை குறிவைப்பவையாக இருக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.