பிரித்தானிய நகரமொன்றைப் புரட்டிப்போட்ட சூறாவளி: வெளியாகியுள்ள புகைப்படங்கள்
பிரித்தானியாவை புயலொன்று தாக்கிய நிலையில், இங்கிலாந்திலுள்ள முக்கிய நகரமொன்றை சூறாவளியொன்று துவம்சம் செய்துள்ளது.
துவம்சம் செய்த சூறாவளி
பிரித்தானியாவை Gerrit என்று பெயரிடப்பட்டுள்ள புயல் ஒன்று தாக்கிய நிலையில், இங்கிலாந்திலுள்ள கிரேட்டர் மான்செஸ்டர் நகரை நேற்றிரவு சூறாவளி ஒன்று துவம்சம் செய்துள்ளது.

Credit: LNP
Stalybridge என்னும் இடத்திலுள்ள கட்டிடங்கள் இந்த சூறாவளியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், மக்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் இருந்ததாக தகவல் இல்லை. மக்களில் பலர் தங்கள் விடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், பொறியாளர்கள் வீடுகளை ஆய்வு செய்யும் வரை, மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Credit: LNP
மேலும், காற்றில் பறக்கும் பொருட்களால் ஆபத்து ஏற்படலாம் என்பதால், வாகனங்களில் பயணிப்போர் Stalybridge பகுதியை முடிந்தால் தவிர்க்கவும், இல்லையென்றால், கவனமாக பயணிக்கவும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
சூறாவளியால் ஏற்பட்ட சேதத்தைக் காட்டும் புகைப்படங்களை இங்கு காணலாம்.

Credit: LNP

Credit: UKNIP

Credit: Ian Sproat/pictureexclusive.com

Credit: MET Office

Credit: LNP

Credit: UKNIP

Credit: UKN

Credit: Getty

Credit: PA
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |