பிரான்சை தாக்கவிருக்கும் பணவீக்க சுனாமி... நிபுணர்கள் எச்சரிக்கை!
ஐரோப்பாவைப் பொருத்தவரை பிரான்சில் காணப்படும் விலைவாசி உயர்வு பெரிய அளவில் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அந்த விலைவாசி உயர்வும் பிரான்சில் வாழும் நுகர்வோருக்கு வேதனையைக் கொடுக்காமல் இல்லை.
வெளியாகும் தகவல்களில் முழு உண்மைத்தன்மை இல்லை
பிரான்சில் பணவீக்கத்தைப் பொருத்தவரை, பொய்யான தகவல்கள் பல வெளியாகிவருகின்றன. அதிகாரப்பூர்வ தரவுகளோ, பிரான்சில் விலைவாசி கடந்த ஆண்டில் 6.2 சதவிகிதம் அதிகரித்தது என்கின்றன. உணவுப்பொருட்கள் விலையை மட்டும் பார்த்தால், அது 10 சதவிகிதம் அளவுக்கு உயர்ந்துள்ளது.
பிரான்ஸ் எப்படி விலைவாசி உயர்வைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது?
பிரான்ஸ் அரசு, மின்சாரம், எரிவாயு, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைவாசியை கட்டுக்குள் வைப்பதற்காக 150 பில்லியன் யூரோக்கள் செலவிட்டது. அதனால்தான், பிரான்சில் பணவீக்கம் மற்ற நாடுகள் அளவுக்கு, அதிகமாக இல்லை என்பதுதான் உண்மை.
ஜனவரியில் தாக்க இருக்கும் பணவீக்க சுனாமி
பிரான்ஸ் ஜனவரியில் இரட்டை அதிர்ச்சி ஒன்றை எதிர்கொள்ள இருக்கிறது. அதை E. Leclerc பல்பொருள் அங்காடியின் தலைவரான Michel-Edouard Leclerc, சுனாமி என வர்ணிக்கிறார்.
இதுவரை அரசு பெட்ரோல், எரிவாயு, டீசலுக்கு அரசு உதவித்தொகை வழங்கிக்கொண்டிருந்தது. அதையே அரசு நிரந்தரமாக செய்துகொண்டிருக்கமுடியாது. ஆகவே, ஜனவரியிலிருந்து பிரான்சில் ஆற்றலுக்கான செலவு அதிகரிக்கிறது!
அடுத்த அதிர்ச்சி, உணவுப்பொருட்கள் விலையைப் பொருத்தவரை, பிரான்சில் ஒரு சுனாமியே வீசப்போகிறது என எச்சரித்துள்ளார் Leclerc.
இந்நிலையில், சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்று, 89 சதவிகித பிரான்ஸ் நாட்டவர்கள் எதிர்காலம் குறித்து, அதுவும் வரும் ஆண்டுகள் குறித்து மிகுந்த கவலைகொண்டிருக்கிறார்கள் என்கிறது.
Photo by Christophe SIMON / AFP