சிகிச்சைக்கு தாமதம் ஆனதால் 13 பேரை நோயாளி தாக்கிய விவகாரத்தில் அதிரடி திருப்பம்
பிரான்ஸ் நாட்டில் மருத்துவமனையில் தனக்கு சிகிச்சை கிடைக்க தாமதம் ஆனதால் நோயாளி ஒருவர் கோபத்தில் 13 பேரை தாக்கியதாக ஒரு செய்தி வெளியானது.
அந்த செய்தியில் அதிரடி திருப்பம் ஒன்று குறித்த ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
13 பேரை தாக்கிய நோயாளி
பிரெஞ்சு நகரமான Annemasseஇல், சகோதரர்கள் இருவர் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்கள்.
அவர்களில் ஒருவருக்கு வேலை செய்யும் இடத்தில் வைத்து காயம் ஏற்பட்டுள்ளது.
ஆனால், அவருக்கு சிகிச்சை கிடைக்க தாமதம் ஆகியுள்ளது. அதனால் கோபத்தில் அவர் அங்கிருந்தவர்களைத் தாக்கத் துவங்கியதாகவும், அதில் 13 பேர் காயமடைந்ததாகவும் செய்திகள் வெளியாகின.
அதிரடி திருப்பம்
ஆனால், தற்போது அந்த செய்தி தொடர்பில் மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.
ஆம், அந்த மருத்துவமனையில் நோயாளிகள் பலர் காத்திருக்க, பணியில் இல்லாத மருத்துவமனை ஊழியர்கள் பலர் இணைந்து மதுபான பார்ட்டி கொண்டாடிக்கொண்டிருந்ததாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.
காயம் பட்டு சிகிச்சைக்காக காத்திருந்த அந்த நபரை செவிலியர் ஒருவர் பிடித்துத் தள்ளியுள்ளார். அவரிடமிருந்து மதுபான நாற்றம் வீசியுள்ளது.
அதாவது, மது போதையிலிருந்த அந்த செவிலியர், காயம் பட்ட நோயாளியைப் பிடித்துத் தள்ள, பதிலுக்கு அவர் தாக்க, சண்டை பெரிதாகியுள்ளது.
இந்த விடயம் குறித்து புகாரளிக்கச் சென்ற சகோதரர்களை பொலிசார் கைது செய்துள்ளார்கள்.
உண்மை வெளியில் வந்ததையடுத்து தற்போது விடயம் நீதிமன்றத்துக்குச் செல்ல இருக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |