மகாராணியாரின் இறுதிச்சடங்கு: மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ள வீடியோ காட்சி
மறைந்த பிரித்தானிய மகாராணியாரின் இறுதிச்சடங்கு திங்கட்கிழமையன்று நடைபெற்றது.
ராஜகுடும்பத்தின் சார்பில், புனித ஜார்ஜ் தேவாலயத்தில் நடைபெற்ற மகாராணியாரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியைக் காட்டும் வீடியோ ஒன்று ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது.
திங்கட்கிழமையன்று மறைந்த பிரித்தானிய மகாராணியாரின் இறுதிச்சடங்கு நடைபெற்றது.
இந்நிலையில், ராஜகுடும்பம் சார்பில் புனித ஜார்ஜ் தேவாலயத்தில் நடைபெற்ற மகாராணியாரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
Queen Elizabeth II was interred in a vault at St George's chapel on Monday, alongside her late husband, the Duke of Edinburgh, her parents and sister. pic.twitter.com/uhWLMzozwH
— The Royal Family Channel (@RoyalFamilyITNP) September 20, 2022
ஆனால், அந்த வீடியோவில், மகாராணியாரின் உடல் வைக்கப்பட்டுள்ள சவப்பெட்டி ராயல் வால்ட்டுக்குள் இறக்கப்படும் காட்சி இடம்பெறவில்லை.
அதனால், ஏமாற்றமடைந்த மக்கள் சமூக ஊடகங்களில் தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
அதேநேரத்தில், சில தனியார் தொலைக்காட்சிகளில், மகாராணியாரின் உடல் வைக்கப்பட்டுள்ள சவப்பெட்டி ராயல் வால்ட்டுக்குள் இறக்கப்படுவதை சில விநாடிகளுக்கு மட்டும் காட்டும் வீடியோக்கள் இடம்பெற்றுள்ள விடயம் சற்றே ஆறுதலை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.