ஒரே ஒரு குடும்பம் மட்டும் வசிக்கும் கிராமம்- இந்தியாவில் எங்கு உள்ளது?
அசாமின் கோக்ரபாரா வட்டத்தில் உள்ள நல்பாரி மாவட்டத்தில் பர்தனாரா என்கிற தனிமைப்படுத்தப்பட்ட கிராமம் ஒன்று அமைந்துள்ளது.
இந்த பர்தனாரா கிராமத்தில், ஒரே ஒரு குடும்பம் மட்டுமே வசித்து வருகிறது என்பது ஆச்சரியமான விடயம்.
தனிமைப்படுத்தப்பட்ட கிராமமான பர்தனாராவில், பிமல் தேகா என்பவரின் குடும்பம் மட்டுமே வசித்து வருகிறது.
கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளாக அங்கு வசித்து வரும் குடும்பத் தலைவரான தேகா, தனது குடும்பத்தினருடன் ஒரு தற்காலிக குடியிருப்பில் இருக்கிறார்.
தேகாவின் மனைவி அனிமாவும், அவர்களது மூன்று குழந்தைகளான நரேன், தீபாலி மற்றும் சியூட்டி என ஐந்து பேர் இந்த குடும்பத்தில் உள்ளனர்.
சாலை இணைப்பே இல்லாத இந்த கிராமம் கடந்த நூற்றாண்டில் மிகவும் செழிப்பாக இருந்திருக்கிறது.
ஆனால், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 16 நபர்கள் மட்டுமே எஞ்சியிருந்தனர். தற்போது ஒரே ஒரு குடும்பம் மட்டுமே உள்ளனர்.
அந்த கிராமத்திற்கு மின்சார இணைப்பும் இல்லாததால், இவர்கள் மண்ணெண்ணெய் விளக்குகளில் படிக்கின்றனர்.
மழை பெய்யும் காலங்களில், கிராமத்தின் அனைத்து பாதைகளும் வெள்ளத்தில் மூழ்கிவிடும் என்பதால், இந்த குடும்பம் படகில் தான் நகரத்திற்கு செல்வார்கள்.
பர்தனாரா கிராமத்தில் வசித்து வந்த மக்களுக்கு போதுமான வளங்கள் கிடைத்ததால், பலர் இங்கிருந்து போனதாக கூறப்படுகிறது.
கிராமிய விகாஷ் மஞ்சா என்கிற அரசு சாரா நிறுவனம், இந்த கிராமத்தில் ஒரு விவசாயப் பண்ணையை அமைத்துள்ளது.
இது அந்த குடும்பத்திற்கு தேவையான ஆதரவையும், வெளிப்புற தொடர்புகளுக்கும் வசதியாக்குகிறது.
மேலும், அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதற்கு இந்த குடும்பம் தொடர்ந்து போராடி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |