கமலா ஹரிஸ் வெற்றி பெற பிரார்த்திக்கும் தமிழ்நாட்டிலுள்ள ஒரு கிராம மக்கள்: சுவாரஸ்ய தகவல்கள்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹரிஸ் வெற்றி பெறுவதற்காக, இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள சிறிய கிராமம் ஒன்றிலுள்ள மக்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். அது குறித்த சில சுவாரஸ்ய தகவல்களை இங்கு காணலாம்.
கமலா ஹரிஸுக்காக பிரார்த்திக்கும் கிராம மக்கள்
தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி வட்டாரத்தில் அமைந்துள்ளது, துலசேந்திரபுரம் என்னும் கிராமம்.
அதுதான், கமலா ஹரிஸின் தாயான ஷ்யாமளாவும் தாத்தாவான P.V. கோபாலனும் பிறந்த ஊர்.
ஷ்யாமளா, தனது 19ஆவது வயதில் மருத்துவம் படிப்பதற்காக அமெரிக்கா சென்றார். அமெரிக்காவில் கமலாவும் அவரது தங்கையான மாயாவும் பிறந்தனர்.
கமலா துலசேந்திரபுரம் கிராமத்தில் வாழ்ந்ததில்லை என்றாலும், தன் தாத்தாவை சந்திப்பதற்காக, சிறு பிள்ளையாக இருக்கும்போது அங்கு சென்றுள்ளார்.
என்றாலும், அவரது உறவினர்கள் பலர் இன்றும் அங்கு வாழ்ந்துவருகிறார்கள்.
ஆக, கமலா அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவதற்காக, துலசேந்திரபுரம் கிராம மக்கள் அவருக்காக பிரார்த்தனை செய்துவருகிறார்கள்.
அந்த கிராமத்திலுள்ள கோவில் ஒன்றின் அருகே, தங்கள் மகள் வெற்றிபெற வாழ்த்தும் பேனர் ஒன்று தொங்கிக்கொண்டிருக்கிறது.
பெரியவர்கள், கமலா தங்கள் கிராமத்துக்கு புகழைச் சேர்த்துள்ளதாக பாராட்ட, 19 வயது மதுமிதா, கமலாதான் எங்களுக்கு இன்ஸ்பைரேஷன் என்கிறார்.
ஆக, துலசேந்திரபுரம் கிராமத்திலுள்ள பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை, தங்கள் வீட்டுப் பிள்ளையான கமலா அமெரிக்க ஜனாதிபதியாகும் நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |