பிரான்சுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு பிரான்ஸ் பொலிசார் விடுத்துள்ள எச்சரிக்கை
*பிரான்சுக்கு சுற்றுலா வருவோரை குறிவைத்து மோசடி ஒன்று நடப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
*உடற்குறைபாடுகள் உடையோருக்கு உதவும் தொண்டுநிறுவனங்களுக்கு உதவுவதாக கூறி ஏமாற்றும் மோசடியாளர்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு மோசடி ஒன்று தொடர்பாக எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
பாரீஸில் சமீப காலமாக ஒருவித நூதன மோசடி நடைபெறுகிறதாம். அதாவது இளம்பெண்களும் இளைஞர்களும் தாங்கள் தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பில் அரசுக்கு முன்வைத்துள்ள கோரிக்கைகளில் கையெழுத்திடுமாறு சுற்றுலாப்பயணிகளைக் கோருவதுடன், அவர்களிடம் நன்கொடையும் கேட்கிறார்களாம்.
Photo by Christophe ARCHAMBAULT / AFP
ஆனால், உண்மையில் அவர்கள் கோருவது போல் உண்மையில் எந்த தொண்டு நிறுவனமும் இருப்பதில்லையாம்.
அதேபோல, சில நேரங்களில் இந்த இளைஞர்கள் தங்கள் கோரிக்கைகளில் சுற்றுலாப்பயணிகளை கையெழுத்திடக் கோரும்போது, தெரியாதவர்கள் அதில் கையெழுத்திடுவதில் கவனமாக இருக்கும்போது, அவர்களிடம் பிக்பாக்கெட் அடிக்கப்படுகிறதாம்.
பெரும்பாலும் காது கேட்காதவர்கள், அல்லது வாய் பேசாதவர்கள் போல் நடிக்கும் இந்த மோசடியாளர்கள், காது கேட்காதவர்களுக்கான தொண்டு நிறுவனங்களுக்காக நன்கொடை கேட்பது போல ஏமாற்றுகிறார்களாம்.
ஆகவே, சுற்றுலாப்பயணிகள், குறிப்பாக ஈபிள் கோபுரம் போன்ற பிரபல சுற்றுலாத்தலங்களுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள், இதுபோன்ற மோசடியாளர்களிடம் ஏமாந்துவிடவேண்டாம் என பொலிசார் எச்சரித்துள்ளார்கள்.
#MardiConseil | ? Les lieux touristiques sont propices aux arnaques en tous genres.
— Préfecture de Police (@prefpolice) August 9, 2022
❌ Méfiez-vous des mineurs qui vous abordent, pétition à la main, pour vous faire signer quelque chose et vous réclament de l'argent.
➡️ C'est une arnaque, ignorez-les ! pic.twitter.com/87xjiG9yB5