பிரான்ஸ் செல்லும் சுற்றுலாப்பயணிகளுக்கு ஒரு எச்சரிக்கை
பிரான்ஸ் நாட்டில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், பல்லாயிரக்கணக்கானோர் பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்குச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பிரான்ஸ் செல்லும் சுற்றுலாப்பயணிகளுக்கு பயனுள்ள ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
பிரான்ஸ் செல்லும் சுற்றுலாப்பயணிகளுக்கு ஒரு எச்சரிக்கை
பிரான்சில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளதையடுத்து, அங்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் குவிவார்கள் என்பதால், பாரீஸ் அதிகாரிகள், சுற்றுலா வரியை அதிகரித்துள்ளார்கள். தங்குமிடத்துக்கு ஏற்ப, சுற்றுலா வரி 260 சதவிகிதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் சுற்றுலா வருவோருக்கு உகந்த வகையில் சுற்றுலாத்தலங்களைப் பராமரிப்பதற்காக, உள்ளூர் அதிகாரிகள் இந்த சுற்றுலா வரியை வசூலிக்கிறார்கள்.
வரி எவ்வளவு செலுத்தவேண்டியிருக்கும்?
நீங்கள் எந்த நாட்டவர், எத்தகைய ஹொட்டலில் தங்கவிருக்கிறீர்கள் என்பது முதலான பலவேறு காரணிகளின் அடிப்படையில், இந்த சுற்றுலா வரி ஒரு இரவுக்கு 2.60 யூரோக்கள் முதல், 19.45 யூரோக்கள் வரை ஆளாளுக்கு மாறுபடும். 18 வயதுக்குக் குறைந்தவர்களுக்கு இந்த வரி கிடையாது.
இதற்கிடையில், இந்த வரி தொடர்பான செய்தி வெளியாகியுள்ளதால், அதை வைத்து மோசடி செய்யும் ஒரு கூட்டமும் இருக்கும். ஆகவே, அத்தகையவர்களிடம் ஏமாந்துவிடவேண்டாம் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளார்கள்.
இந்த வரித்தொகை, கேட்பதற்கு குறைவாக தோன்றினாலும், நீங்கள் நான்கு அல்லது ஐந்து பேர் கொண்ட ஒரு குடும்பமாக அல்லது குழுவாக பாரீஸுக்கு சுற்றுலா செல்வீர்களானால், நீங்கள் கணிசமான ஒரு தொகையை செலுத்தவேண்டியிருக்கும் என்பத நினைவில் கொள்ளவும். உதாரணமாக, வயது வந்த நான்கு பிள்ளைகளுடன் நீங்கள் சுற்றுலா செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், நீங்கள் ஒரு இரவு பாரீஸில் தங்க, 59.80 யூரோக்கள் அல்லது 51.33 பவுண்டுகள் கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |