சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளோருக்கு ஒரு முக்கிய செய்தி
சுவிட்சர்லாந்துக்கு அடுத்த ஆண்டில் சுற்றுலா செல்லத் திட்டமிட்டுள்ளோருக்கு சுமையாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளோருக்கு ஒரு செய்தி
அடுத்த ஆண்டு, சுவிஸ் சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளவர்கள், பனிச்சறுக்கு செல்வதற்கு சற்று கூடுதல் செலவிடவேண்டியிருக்கும்.
பனிச்சறுக்கு செல்வதற்கான கட்டணம், அடுத்த ஆண்டு, அதாவது, 2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில், 6 சதவிகிதம் அதிகரிக்க உள்ளது.
அதே நேரத்தில், குடும்பங்களுக்கு ஆகும் செலவு 4 சதவிகிதம் குறைந்துள்ளது. அதாவது, கடந்த ஆண்டில், நான்கு பேரைக் கொண்ட ஒரு குடும்பம் பனிச்சறுக்கு சுற்றுலாவுக்காக 5,832 சுவிஸ் ஃப்ராங்குகள் செலவிட்டிருந்தால், இந்த ஆண்டு, அவர்கள் 5,604 சுவிஸ் ஃப்ராங்குகள் செலவு செய்தால் போதும்.
ஆனால், ஜோடியாக அல்லது தம்பதிகளாக வருவோர், ஒரு வார பனிச்சறுக்கு விடுமுறைக்கு 13 சதவிகிதம் அதிகம் செலவிடவேண்டியிருக்கும்.
இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால், தங்கும் இடங்களுக்கான வாடகை அதிகரித்துள்ளதுதான்.
என்றாலும், குடும்பங்கள் தங்களுக்கேற்ப ஒரு குடியிருப்பை தேர்வு செய்வார்கள். ஆகவே அவர்கள் தங்கள் செலவைக் கட்டுப்படுத்தி செலவு செய்வார்கள்.
ஆனால், ஜோடிகளோ, நான்கு நட்சத்திர ஹொட்டல்களில் தங்க விரும்புகிறார்கள். ஆகவேதான் அவர்களுக்கு கூடுதல் செலவாகிறது.
ஒரே ஒரு நல்ல செய்தி, எட்டு நாட்களுக்கான பனிச்சறுக்கு பாஸ் விலை, சராசரியாக 3 சதவிதம் குறைந்துள்ளது என்பதுதான்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |