லண்டனில் பரபரப்பான சாலையில் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி! பொலிசார் வைத்த கோரிக்கை... சம்பவ இடத்தின் புகைப்படம்
லண்டனில் பரபரப்பான சாலையில் சென்ற போது கார் மோதியதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
மேற்கு லண்டனின் ரிச்மண்டின் டிவிகென்ஹம் சாலையில் தான் இந்த சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணியளவில் நடந்துள்ளது.
50களில் உள்ள பெண் சாலையில் சென்ற போது அவர் மீது கார் வேகமாக மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இது குறித்து பொலிசார் கூறுகையில், உயிரிழந்த பெண்ணின் உறவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது மற்றும் சிறப்பு அதிகாரிகள் அவருக்கு உதவியாக இருக்கின்றனர்.
சம்பவத்தில் தொடர்புடைய கார் ஓட்டுனர் அதே இடத்திலேயே இருந்திருக்கிறார்
இது தொடர்பாக நேரில் பார்த்த சாட்சிகள் மற்றும் வீடியோ பதிவு எதாவது இருந்தால் எங்களிடம் தெரிவிக்கலாம் என கூறியுள்ளனர்.
