நாடாளுமன்றத்தில் துஷ்பிரயோகம் செய்யப்பட பெண்! கட்சி உறுப்பினர் செய்த செயலுக்கு மன்னிப்புக் கேட்ட பிரபல நாட்டின் பிரதமர்
அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் சக ஊழியரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டிய ஒரு பெண்ணிடம் பிரதமர் ஸ்காட் மோரிசன் மன்னிப்பு கேட்டுள்ளார்.
பாதுகாப்பு மந்திரி லிண்டா ரெனால்ட்ஸ் அலுவலகத்தில் 2019 மார்ச் மாதம் பிரதமர் ஸ்காட் மோரிசனின் ஆளும் லிபரல் கட்சியில் பணியாற்றிய ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக Brittany Higgins குற்றம் சாட்டினார்.
இது குறித்து Higgins முறையான புகார் அளிக்க விரும்பாததால், ஏப்ரல் 2019 தனிப்பட்ட முறையில் பொலிஸில் தகவல் கொடுத்ததாகவும், தற்போது தனது தொழில் வாய்ப்புக்கள் குறித்த கவலைகளுக்கு மத்தியில் முறையான புகார் அளிக்க முடிவு செய்ததாகவும் அவர் ஊடகங்களில் கூறியுள்ளார்.
துஷ்பிரயோகம் நடந்ததாகக் கூறப்படும் ரெனால்ட்ஸ் அலுவலகத்தில் உள்ள மூத்த ஊழியர்களிடம் இது குறித்து தெரிவித்ததாக அந்தப் பெண் கூறினார்.
கடந்த ஆண்டு நடத்த இந்த சம்பவம் குறித்து தனக்குத் தெரிவிக்கப்பட்டதாக ரெனால்ட்ஸ் திங்களன்று உறுதிப்படுத்தினார்.
இந்நிலையில், பிரதமர் ஸ்காட் மோரிசன் இன்று ஹிக்கின்ஸிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும், அரசாங்கத்தின் பணியிட கலாச்சாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படம் என்றும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
கான்பெர்ராவில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் "இப்படி நடந்திருக்கக்கூடாது, நான் மன்னிப்பு கேட்கிறேன். இந்த இடத்தில் பணிபுரியும் எந்தவொரு இளம் பெண்ணும் முடிந்தவரை பாதுகாப்பாக இருப்பதை நான் உறுதிப்படுத்த விரும்புகிறேன்" என்றார்.