வீடு ஒன்றிற்குள் நுழைய முயன்ற பிரம்மாண்ட பாம்பைக் கண்டு அதிர்ந்த மக்கள்: பெண் சர்வசாதாரணமாக செய்த செயல்
பிரித்தானியாவில் ராட்சத பாம்பு ஒன்று ஒரு வீட்டுக்குள் நுழைய முயன்றுள்ளது.
பெரும்பாலானோர் பயந்துபோய் நிற்க, ஒரு பெண் சர்வசாதாரணமாக அதை தோளில் தூக்கிச் சென்றுள்ளார்.
பிரித்தானியாவில் வீடு ஒன்றிற்குள் ஜன்னல் வழியாக ராட்சத பாம்பு ஒன்று நுழைய முயல்வதைக் கண்ட மக்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.
Hampshireஇலுள்ள வீடு ஒன்றிற்குள் அந்த பர்மிய வகை மலைப்பாம்பு நுழைய முயற்சி செய்துகொண்டிருந்தது.
அதிர்ச்சியடைந்த மக்கள், குச்சி ஒன்றைக் கொண்டு அதைத் தள்ள, அது கீழே விழுந்துள்ளது.
SOLENT NEWS & PHOTO AGENCY
அப்போது, Linda Elmer என்ற பெண் வெளியே நடக்கும் களேபரத்தைப் பார்க்க வீட்டைவிட்டு வெளியே வந்துள்ளார்.
அப்போது அந்த பாம்பைக் கண்ட Linda, அதைக் கூர்ந்து கவனிக்க, அது அதே பகுதியில் வாழும் ஒருவருக்குச் சொந்தமான பாம்பு என்பது அவருக்குத் தெரியவந்துள்ளது.
ஆகவே, அதைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு அதன் உரிமையாளரிடம் அந்த பாம்பைக் கொண்டு சேர்க்கச் சென்றுள்ளார் Linda.
SOLENT NEWS & PHOTO AGENCY
ஆனால், அதைத் தூக்கக்கூட யாரும் உதவிக்கு வரவில்லையாம். ஆக, அவர்கள் எல்லாரும் பயந்துபோய் தூர நிற்க, அந்த 18 அடி நீள மலைப்பாம்பை கஷ்டப்பட்டுத் தூக்கிக்கொண்டு சென்று அதன் உரிமையாளரிடம் சேர்த்துள்ளார் Linda.
விடயம் எனவென்றால், Lindaவும் இதேபோல் ஒரு பாம்பை வளர்க்கிறாராம்.
வன விலங்குகள் நல அமைப்பு பாம்புகளை வளர்ப்போர் அவற்றை வெளியே வராத வகையில் பத்திரமாக பாதுகாத்து வைக்குமாறு ஏற்கனவே வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
INDA ELMER
JENNY WARWICK