டாக்டராக இருந்து ஐஏஎஸ் அதிகாரியான பெண்.., 7 ஆண்டுகளுக்கு பிறகு ராஜினாமா செய்து தற்போது செய்யும் வேலை?
டாக்டராக இருந்து ஐ.ஏ.எஸ் அதிகாரியாக மாறிய தனு ஜெயின் என்ற பெண் 7 ஆண்டுகளுக்குப் பிறகு பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
யார் அவர்?
ததாஸ்து ஐ.சி.எஸ் (Tathastu ICS) நிறுவனர் டாக்டர் தனு ஜெயின், UPSC தேர்வில் தேர்ச்சி பெற விரும்புவோருக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்.
இவர், டெல்லியின் சதார் பகுதியில் பிறந்தார். கேம்பிரிட்ஜ் பள்ளியில் பயின்று, பின்னர் சுபார்த்தி மருத்துவக் கல்லூரியில் பல் அறுவை சிகிச்சையில் இளங்கலை (பி.டி.எஸ்) பட்டம் பெற்றார்.
இவர் மருத்துவப் படிப்பின் போது, சிவில் சர்வீசஸ் துறையில் ஆர்வம் காட்டி யு.பி.எஸ்.சி. தேர்வுக்குத் தயாராகத் தொடங்கினார்.
இதையடுத்து முதல் முயற்சியிலேயே டாக்டர் ஜெயின் முதல்நிலைத் தேர்வில் இரண்டே மாதங்களில் தேர்ச்சி பெற்றார். ஆனால் மெயின் தேர்வில் தோல்வியை சந்தித்தார்.
பின்னர் 2014 ஆம் ஆண்டு தனது மூன்றாவது முயற்சியில் அகில இந்திய அளவில் 648வது இடத்தைப் பிடித்தார். பின்னர் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக சிவில் சர்வீஸில் பணியாற்றி, சுகாதாரம் மற்றும் கல்வி சீர்திருத்தங்களில் கவனம் செலுத்தினார்.
இவர் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக தனது நிறைவான வாழ்க்கையைத் தொடர்ந்தாலும் ராஜினாமா செய்து கற்பித்தலுக்காக தைரியமான முடிவை எடுத்தார்.
யு.பி.எஸ்.சி. தேர்வர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை உணர்ந்து, யு.பி.எஸ்.சி. தயாரிப்பின் சவால்களை மற்றவர்கள் சமாளிக்க வேண்டும் என்று எண்ணினார்.
அதற்காக ஆர்வமுள்ள அரசு ஊழியர்களுக்கு வழிகாட்டுவதற்காக பயிற்சி நிறுவனமான ததாஸ்து ஐ.சி.எஸ்-ஐ நிறுவியுள்ளார்.
இவரது ஊக்கமளிக்கும் உரைகள் மற்றும் நடைமுறை வழிகாட்டுதல்கள் சமூக ஊடகங்களில் குறிப்பிடத்தக்க பின்தொடர்பைப் பெற்றுத் தந்துள்ளன.
தற்போது இன்ஸ்டாகிராமில் 9,52,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார். யுபிஎஸ்சி தேர்வுக்கு தாயாராகும் நபர்களுக்கு போலி நேர்காணல்களையும் எழுதி நடத்துகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |