பிரித்தானியாவில் ஓடும் காரில் குழந்தை பெற்றெடுத்த பெண்! பின்னர் அவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி
இங்கிலாந்தில் ஓடும் காரில் குழந்தை பெற்று கொண்ட பெண்ணிற்கு வாடகை கார் நிறுவனம் அபராதம் விதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனை சேர்ந்த 26 வயது பாரா காகனிண்டின் என்ற பெண் ஒருவர் வழக்கமான பரிசோதனைக்காக வாடகை காரில் வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது கார் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் சென்றுகொண்டிருந்த வேளையில் பாராவுக்கு எதிர்பாராத விதமாக திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளதால் இவர் காரிலேயே அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
Credit: Doug Seeburg/News Group Newspapers Ltd
அதன் பின்னர் கார் வைத்தியசாலைக்கு சென்றடைந்ததும் அங்கு தயாராக இருந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் தாயையும், சேயையும் மீட்டு சிகிச்சை அளித்தனர்.
தாயும் சேயும் நலமாக உள்ள நிலையில் பாராவை ஏற்றி சென்ற வாடகை கார் நிறுவனம் காரில் குழந்தை பெற்றெடுத்தபோது காரில் ஏற்பட்ட அசுத்தத்தை காரணம் காட்டி அந்த வாடகை கார் நிறுவனம் அபராதம் விதித்துள்ளது.
அந்த வாடகை கார் நிறுவனம் பாராவுக்கு அதனை சுத்தம் செய்ய 60 பவுண்டு (சுமார் ரூ.5,700) செலுத்த வேண்டுமென நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார் என தகவல் வெளியாகியுள்ளது.
Credit: Not known, clear with picture desk