நடுவானில் மாரடைப்பு ஏற்பட்ட பெண்: பிரித்தானியா நோக்கி வந்த விமானத்தில் ஒரு துயர சம்பவம்...
பிரித்தானியாவிலுள்ள ஹீத்ரோ விமான நிலையம் நோக்கி வந்துகொண்டிருந்த விமானம் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த பெண் ஒருவருக்கு நடுவானில் மாரடைப்பு ஏற்பட்டது.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார்கள்.
பிரித்தானியா நோக்கி வந்துகொண்டிருந்த விமானம் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த பெண் ஒருவருக்கு நடுவானில் மாரடைப்பு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
30,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த அந்த விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்த அந்த 51 வயதுப் பெண்ணுக்கு திடீரென மாரடைப்பு ஏற்படவே, உடனடியாக தரைக்கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
ஹீத்ரோ விமான நிலையத்தில் அவசர உதவிக்குழுவினர் தயாராக காத்திருக்க, விமானம் ஓடுபாதையில் இறங்கியதும் அவர்கள் விமானத்துக்குள் விரைந்தார்கள்.
ஆனால், அவர்கள் அவரை பரிசோதிக்கும்போது அவர் உயிரிழந்துவிட்டிருந்தார்.
இந்த சம்பவத்தால் சிறுவர்கள் உட்பட விமானத்தில் பயணித்த அனைவரும் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.
அந்த பெண் அமெரிக்காவிலிருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்டவர் என்ற தகவல் தவிர, அவரைக் குறித்த வேறு எந்த விவரமும் வெளியிடப்படவில்லை.