இளம் வயதிலேயே தாயை இழந்த பெண்.., UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது ஐஏஎஸ் அதிகாரி
இளம் வயதிலேயே தாயை இழந்த பெண் ஒருவர் மூன்றாவது முயற்சியில் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று ஐஏஎஸ் அதிகாரியாக மாறியுள்ளார்.
ஐஏஎஸ் அதிகாரியாக மாறிய பெண்
இந்திய மாநிலமான உத்தரபிரதேசம், பாக்பத் மாவட்டத்தில் உள்ள பரோட் கிராமத்தைச் சேர்ந்தவர் ரூபால் ராணா. இவரது தந்தை ஜஸ்வீர் ராணா, டெல்லி காவல்துறையில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக (ASI) பணியாற்றுகிறார். இவர் தனது இளம் வயதிலேயே தாயை இழந்தபோது அவரது வாழ்க்கை கடினமாக இருந்தது.
கல்வியில் சிறந்து விளங்கிய ரூபால் ராணா பள்ளி படிப்பை முடித்து டெல்லி பல்கலைக்கழகத்தின் தேஷ்பந்து கல்லூரியில் அறிவியல் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
இதையடுத்து UPSC தேர்வுக்கு தாயாராக தொடங்கி முதல் இரண்டு முயற்சிகளிலும் தோல்வியை சந்தித்தார்.
பின்னர் விடா முயற்சியுடன் மூன்றாவது முயற்சியில் UPSC CSE 2023-ல் அகில இந்திய அளவில் 26-வது தரவரிசையுடன் தேர்ச்சி பெற்று, IAS அதிகாரியாக வேண்டும் என்ற தனது இலக்கை அடைந்தார்.
இதன்பிறகு AGMUT கேடருக்கு நியமிக்கப்பட்டு தற்போது பயிற்சியில் உள்ளார் ரூபால் ராணா. அதோடு முதல் பதவிக்காகவும் காத்திருக்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |