பிரான்ஸ் ஜனாதிபதியை மடக்கி கேள்வி கேட்ட பெண்ணை பணியிடத்துக்கு பொலிசார் தேடிச்சென்றதால் சர்ச்சை
பிரான்ஸ் ஜனாதிபதியைக் கேள்வி கேட்ட ஒரு பெண் ஒருவரை, அவர் பணி செய்யும் பள்ளிக்கு பொலிசார் தேடிச்சென்ற விவகாரம் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதியாகிய இமானுவல் மேக்ரான், கடந்த வியாழக்கிழமையன்று Tarn என்ற இடத்துக்குச் சென்றிருந்தார்.
அப்போது லாரா என்னும் ஒரு பெண் அவரிடம், பாலியல் புகாரில் சிக்கியவர்களுக்கு ஏன் நாட்டின் முக்கிய பொறுப்புகளைக் கொடுத்திருக்கிறீர்கள் என்று கேட்டார்.
அதைத் தொடர்ந்து, மறுநாள், வெள்ளிக்கிழமை, அந்த பெண் ஆசிரியையாக பணி செய்யும் பள்ளிக்கு பொலிசார் சென்றிருக்கிறார்கள்.
பள்ளியில் மாணவர்களுக்கு வகுப்பு நடத்திக்கொண்டிருக்கும்போது பொலிசார் லாராவைச் சந்திக்கச் சென்ற விடயம் சமூக ஊடகங்களில் பரபரப்பாக பரவ, தான் அவமதிக்கப்பட்டதுபோல் உணர்ந்திருக்கிறார் அந்தப் பெண்.
இந்நிலையில், அந்த சம்பவத்துக்காக பொலிசார் மன்னிப்புக் கோரியிருக்கிறார்கள்.
⚡️« Vous mettez à la tête de l'Etat des hommes accusés de viol »
— France Résistance (@FranceRsistanc1) June 10, 2022
"You put at the head of the state men accused of rape"
Laura an 18-year-old high school student who arrested Emmanuel Macron yesterday in Gaillac received a visit from the gendarmerie at the high school this morning pic.twitter.com/Jn7SdxfNWv
சமூக ஊடகம் ஒன்றில் பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், தாங்கள் அந்தப் பெண்ணை பாதிக்கப்பட்டவராகக் கருதி, அவர் முறைப்படி புகாரளிக்க விரும்புகிறாரா என்பதைக் கேட்பதற்காகத்தான் அவர் பணி செய்யும் பள்ளிக்குச் சென்றதாகவும், ஆனால், அது அவரை அவமதிப்பது போன்ற தவறான கருத்தை உருவாக்கியிருக்குமானால், அதற்காக தாங்கள் அவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸ் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருக்கும் Gerald Darmanin மற்றும், ஒற்றுமை மற்றும் உடற்குறைபாடு கொண்டோருக்கான அமைச்சராக இருக்கும் Damien Abad ஆகியோர் மீது பாலியல் வன்புணர்வு புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதைக் குறித்துதான் லாரா கேள்வி எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.