இளம் பிரித்தானிய தம்பதியருக்கு லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்: ஒரே ஒரு ஆசைதானாம்
ஒரு பிரித்தானிய தம்பதிக்கு லொட்டரியில் பரிசு விழுந்துள்ள நிலையில், தங்களுக்கு ஒரே ஒரு ஆசை மட்டுமே இருப்பதாகத் தெரிவித்துள்ளார்கள்.
ஒரே ஒரு ஆசை

Image: Anthony Devlin
பிரித்தானியாவின் Huddersfieldஇல் வாழும் ஆலிவர் பிரைஸ் (34), க்ளோயி ஒயிட் (20) தம்பதியருக்கு லொட்டரியில் 77,616 பவுண்டுகள் பரிசு விழுந்துள்ளது.
ஆனால், தம்பதியருக்கு பெரிதாக ஆசை எதுவும் இல்லையாம், ஒரே ஒரு ஆசை, அமெரிக்காவுக்குச் செல்லவேண்டும் என்பதுதானாம். அதுவும், ப்ளோரிடாவிலுள்ள டிஸ்னி வேர்ல்டுக்கு செல்ல விரும்புகிறார்களாம் இருவரும்.

Image: Getty Images/iStockphoto
அத்துடன், அடுத்ததாக, பாலிக்கும், பிறகு உலக நாடுகள் பலவற்றை சுற்றிப்பார்க்கவும் விரும்புவதாக தெரிவிக்கும் தம்பதியர், அப்படி ஒரு வாய்ப்பு இவ்வளவு சீக்கிரம் கிடைக்கும் என நினைக்கவில்லை என்கிறார்கள்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |