வெளிநாட்டில் மர்மமாக உயிரிழந்த தந்தை மகனைத் தொடர்ந்து பிரித்தானிய இளம்பெண்ணும் மரணம்...

United Kingdom Bangladesh
By Balamanuvelan Aug 06, 2022 05:35 AM GMT
Report

பங்களாதேஷ் நாட்டுக்குச் சென்ற பிரித்தானிய குடும்பத்தினருக்கு விஷம் வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட விவகாரத்தில் மூன்றாவது நபர் உயிரிழந்துள்ளார்.

Cardiffஐச் சேர்ந்த Rafiqul Islam (51) குடும்பத்தினர், இரண்டு மாத விடுமுறைக்காக பங்களாதேஷ் சென்றிருந்தனர். அங்கு, Sylhet என்ற இடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றை வாடகைக்கு எடுத்து அவர்கள் தங்கியிருந்த நிலையில், சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுக்கச் சென்ற குடும்பத்தினர் சுயநினைவிழந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், வழியிலேயே, Rafiqul Islam மற்றும் அவரது மகனான Mahiqul (16) ஆகிய இருவரும் உயிரிழந்தார்கள்.

Rafiqul குடும்பத்தினருக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, பொலிசார் விசாரணை ஒன்றைத் துவக்கினார்கள். ஆனால் Rafiqul மற்றும் அவரது மகனான Mahiqul ஆகிய இருவரின் முதல் கட்ட பிரேதப் பரிசோதனையில், அவர்களுக்கு விஷம் கொடுக்கப்பட்டதற்கான உறுதியான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை.

வெளிநாட்டில் மர்மமாக உயிரிழந்த தந்தை மகனைத் தொடர்ந்து பிரித்தானிய இளம்பெண்ணும் மரணம்... | A Young British Woman Also Died After Her Son

FAMILY PHOTO 

பின்னர், குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய Rafiqulஉடைய மனைவியான Husnara (45), தம்பதியரின் மகனான Sadiqul (24) ஆகியோர் கூறிய ஒரு தகவலைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் பழுதான ஜெனரேட்டர் ஒன்றிலிருந்து வெளியான புகையால், கார்பன் மோனாக்சைடு விஷத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாமா என்ற கோணத்தில் விசாரணை துவக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குடும்பத்தில் மூன்றாவது நபராக, Rafiqulஇன் மகளான Samira (20)ம் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.

குடும்பமாக மகிழ்ச்சியாக நேரம் செலவிடலாம் என்ற எண்ணத்தில் விடுமுறையில் அந்த பிரித்தானிய குடும்பம் பங்களாதேஷ் சென்ற நிலையில், குடும்பத்திலுள்ள மூன்று பேர் உயிரிழந்துவிட்டதால் விவரிக்க இயலாத துயரத்தில் ஆழ்ந்துள்ளனர் குடும்ப உறுப்பினர்கள்.

வெளிநாட்டில் மர்மமாக உயிரிழந்த தந்தை மகனைத் தொடர்ந்து பிரித்தானிய இளம்பெண்ணும் மரணம்... | A Young British Woman Also Died After Her Son

RUNNER MEDIA/BBC 

 

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US