நீச்சல் போட்டிக்காக சென்றபோது திடீரென மயக்கமடைந்த கனேடிய இளம்பெண்... கண் விழித்தபோது உடலில் இருந்த காயங்கள்
கனடாவைச் சேர்ந்தவரான நீச்சல் வீராங்கனை ஒருவர் தனக்கு யாரோ மயக்க மருந்து கொடுத்ததால் தான் சுயநினைவிழந்துவிட்டதாகவும், ஆறு மணி நேரத்துக்கு தனக்கு என்ன நடந்தது என்பது தனக்கு நினைவில்லை என்றும் கூறியுள்ளார்.
Mary-Sophie Harvey (22) புதாபெஸ்டில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்கச் சென்றுள்ளார். போட்டியின் இறுதி நாளன்று திடீரென மயக்கமடைந்துள்ளார் Mary.
கண் விழித்தபோது தான் படுக்கையில் இருப்பதையும், தன் அருகே தனது குழு மேலாளரும் மருத்துவரும் அம்ர்ந்திருப்பதைக் கண்டு திகைப்படைந்துள்ளார் அவர்.
முந்தைய ஆறு மணி நேரம் என்ன நடந்தது என்பது தனக்கு சுத்தமாக நினைவில்லை என்று கூறும் Mary, ஆனால், தன் உடலில் ஏராளம் கீறல்கள் ஏற்பட்டிருப்பதைக் கவனித்துள்ளார்.
தனக்கு ஏற்பட்டுள்ள சில காயங்களின் புகைப்படங்களை சமூக ஊடகம் ஒன்றில் பகிர்ந்துள்ள Mary, தனது உடலில் மேலும் சில இடங்களில் தனக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவற்றை தன்னால் காட்ட இயலவில்லை என்றும் தெரிவித்துள்ளார் அவர். தனக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டபோது தன்னை யாரோ ஏதோ செய்திருக்கலாம் என்று நம்புகிறார் அவர்.
தனக்கு நேர்ந்ததுபோல் மற்றவர்களுக்கும் நேரலாம் என எச்சரிக்கும் Mary, கவனமாக இருக்குமாறு மற்ற விளையாட்டு வீராங்கனைகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.