Microsoft வேலையை விட்டுவிட்டு விவசாயத்தில் இறங்கிய இளைஞர்.. மாதம் ரூ1.5 லட்சம் வருமானம்
Microsoft நிறுவனத்தில் வேலை பார்த்த இளைஞர் ஒருவர் சொந்த ஊர் சென்று விவசாயம் பார்க்கவேண்டும் என்று ஆர்வத்தால் வேலையே ராஜனமா செய்துவிட்டு வந்து விவசாயம் பார்த்து மாதம் ரூ.1.5 லட்சம் சம்பாதிக்கிறார்.
யார் இவர்?
உத்தர பிரதேச மாநிலம் அசம்கர் மாவட்டத்தில் உள்ள சில்பிலா என்ற கிராமத்தை சேர்ந்தவர் அபினவ் சிங்.
விவசாய குடும்பத்தை சேர்ந்த அபினவ் சிங்கிற்கு படிப்பை முடித்தவுடன் பிரித்தானியாவில் உள்ள Microsoft நிறுவனத்தில் ரூ.80 லட்சம் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார்.
பணம் அவருக்கு பெரிதளவில் சந்தோஷம் கொடுக்கவில்லை தனது சொந்த ஊரில் குடும்பம் மற்றும் நண்பர்களோடு இருக்க தான் விரும்பினார். எனவே 2014-ல் பிரித்தானியாவில் இருந்து இந்தியாவுக்கு திரும்பினார்.
சொந்த ஊரில் விவசாயம் செய்வதோடு, அங்குள்ள மக்களுக்கும் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றே அவருடைய விருப்பமாக இருந்ததை தொடர்ந்து 2016-ல் Microsoft வேலையை ராஜினாமா செய்தார்.
மாதம் லட்சக்கணக்கில் வருமானம்
''கெர்பரா'' என்ற பூக்கள் கொண்ட தாவரத்தை விவசாயம் செய்ய விரும்பிய அபினவ் சிங் தனது கிராமத்தில் 4,000 சதுர மீட்டர் பரப்பளவில் ஒரு பாலிஹவுஸ் அமைத்தார்.
உத்தர பிரதேசத்தில் திருமண காலங்களில் இந்த பூக்களுக்கு பெரிய தேவை இருக்கும்.
வங்கி கடன் ரூ.48 லட்சம் மற்றும் தனது சேமிப்பு தொகைகளையும் சேர்த்து மொத்தம் ரூ.58.16 லட்சத்தை முதலீடாக போட்டு இந்த பாலிஹவுஸை அமைத்தார்.
2012 பிப்ரவரியில் முதல் முறையாக அறுவடை செய்தார். பூ சாகுபடி விவசாயத்தை தொடங்கிய ஒரு ஆண்டுக்குள் அபினவ் சிங்குக்கு ரூ.18,00,000 வருமானம் கிடைத்தது.
மேலும், விவசாயம், பேக்கேஜிங், போக்குவரத்து மற்றும் விற்பனை போன்ற பல்வேறு பிரிவுகளில் சுமார் 100 பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |