காதலை ஏற்றுக்கொள்ள மறுத்த இளம் பெண் மருத்துவர்: 40 ஆண்கள் செய்த பயங்கர செயல்
தன் காதலை ஏற்க மறுத்த பெண் மருத்துவரின் வீட்டுக்கு சுமார் 40 ஆண்களுடன் சென்ற ஒருவர், அவரது மருத்துவமனையை அடித்து நொறுக்கியதுடன், அவரையும் கடத்திச் சென்றார்.
இளம் பெண் மருத்துவரை தொந்தரவு செய்த நபர்
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் 24 வயது இளம்பெண் ஒருவர் பல் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார்.
நவீன் ரெட்டி என்பவர், இந்த பெண் மருத்துவரிடம் தன் காதலை வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த பெண்ணுக்காக கார் ஒன்றை வாங்கிய ரெட்டி, தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு அந்த பெண்ணை தொடர்ந்து வற்புறுத்தியிருக்கிறார்.
அவர் மறுப்பு தெரிவிக்கவே, சமூக ஊடகங்களில் அவருக்கு ரெட்டி தொல்லை கொடுக்க, அந்த பெண் பொலிசில் புகாரளிக்க, தன்னை தொந்தரவு செய்யாமல் இருக்கும் வகையில் நீதிமன்றம் சென்று தடை உத்தரவு வாங்கியுள்ளார் அந்தப் பெண்.
கோபத்தில் ரெட்டி செய்த செயல்
அந்த பெண் மருத்துவர் தன் காதலை ஏற்றுக்கொள்ளாததால் ஆத்திரமடைந்த ரெட்டி, 40 ஆண்களுடன் சென்று அந்த பெண் மருத்துவரின் மருத்துவமனையை அடித்து நொறுக்கியுள்ளார்.
அத்துடன் அந்தப் பெண்ணையும் கடத்திச் சென்றுள்ளது அந்தக் கும்பல்.
பொலிசார் தற்போது அந்தப் பெண்ணை மீட்டுள்ள நிலையில், ரெட்டி தலைமறைவாகிவிட்டார். பொலிசார் அவரை தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.
மேலும், மருத்துவரின் அலுவலகத்தை சூறையாடிய 40 பேரில் 18 பேரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மற்றவர்களையும் பொலிசார் தேடிவருகிறார்கள்.