இந்தியாவுக்கு சென்ற பிரான்ஸ் நாட்டு இளம்பெண்: காலையில் கண் விழித்தபோது காத்திருந்த அதிர்ச்சி...
இந்தியாவுக்கு சுற்றுலா சென்ற பிரான்ஸ் நாட்டு இளம்பெண் ஒருவர், தன் சுற்றுலா வழிகாட்டி கொடுத்த பானத்தை அருந்தியபின் சுயநினைவிழந்துள்ளார்.
மறுநாள் கண் விழிக்கும்போது தான் நிர்வாணமாக கிடப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார் அவர்.
இந்தியாவுக்கு சுற்றுலா சென்ற பிரான்ஸ் நாட்டு இளம்பெண் ஒருவர், வாரனாசி என்ற இடத்துக்கு சென்றுள்ளார்.
அப்போது தன்னை ஒரு சுற்றுலா வழிகாட்டி (Tourist guide) என அறிமுகம் செய்துகொண்ட 35 வயது நபர் ஒருவர், அந்தப் பெண்ணை பல இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
மூன்று நாட்கள் பல இடங்களை சுற்றிப் பார்த்தபின்பு, உணவகம் ஒன்றிற்கு அந்தப் பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார் அவர். அங்கு தனது பானத்தில் ஏதோ ஒன்றை அந்த நபர் கலந்துவிட்டதாகத் தெரிவிக்கிறார் அந்த 30 வயது பெண்.
சிறிது நேரத்தில் சுயநினைவிழந்த அவர், மறுநாள் காலையில் கண் விழிக்கும்போது, தனது உடைகள் களையப்பட்டு, தான் நிர்வாணமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
உடனடியாக அவர் பொலிசாரிடம் புகாரளிக்க, CCTV காட்சிகளின் உதவியுடன் அந்த ஆண் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன், இந்த அசம்பாவிதம் குறித்து பிரெஞ்சு தூதரகத்துக்கும் தகவலளிக்கப்பட்டுள்ளது.