சூட்கேசுக்குள் நிர்வாண நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட அழகிய இளம்பெண்: வழக்கில் நீதிபதிகள் எழுப்பியுள்ள கேள்வியால் திருப்பம்
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த அழகிய இளம்பெண் ஒருவரின் உடல் நிர்வாண நிலையில் சூட்கேஸ் ஒன்றிற்குள் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
ஜப்பானிலிருந்து கனடாவுக்கு ஆங்கிலம் கற்பதற்காக வந்தவர்கள் Natsumi Kogawa (30) என்ற இளம்பெண்ணும் William Schneider என்பவரும்.
வந்து நான்கே மாதங்கள் ஆன நிலையில், Natsumi மாயமானார். இந்நிலையில், ஒரு நாள் ஜப்பானிலிருக்கும் தன் மனைவிக்கு போன் செய்வதற்காக தனது சகோதராரின் மொபைலை வாங்கியிருக்கிறார் William.
அவர் தன் மனைவியுடன் மொபைலில் பேசும்போது, Natsumiயின் மரணம் குறித்த செய்தியைக் கேட்டாயா என்று கேட்டிருக்கிறார் William.
அதை கவனித்த அவரது அண்ணன், William தன் மனைவியுடன் பேசும்போது, நான்தான் அவளைக் கொன்றேன், அல்லது நான்தான் அதை செய்தேன் என்று கூறுவதை கவனித்துள்ளார். இந்நிலையில், வான்கூவரில் Natsumiயின் உயிரற்ற உடல் நிர்வாண நிலையில் சூட்கேஸ் ஒன்றிற்குள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Vancouver Police Department William மற்றும் Natsumi சேர்ந்து செல்லும் புகைப்படம் ஒன்று கிடைக்க பொலிசார் அவரை விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.
விசாரணையின்போது, Williamஉடைய அண்ணன், William மொபைலில் அவரது மனைவியுடன் பேசுவதை ஒற்றுக்கேட்டபோது, அவர் நான்தான் அவளைக் கொன்றேன் என்று கூறினார் என பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
கடைசியில் Williamதான் Natsumiயைக் கொன்றார் என முடிவு செய்த நீதிபதிகள், அவருக்கு 14 ஆண்டுகள் ஜாமீனில் வர இயலாதபடி ஆயுள் தண்டனை விதித்தனர்.
இந்நிலையில், தற்போது இந்த வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. வழக்கு மேல் முறையீட்டு நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட, மேல் முறையீட்டு நீதிபதிகள், Williamஉடைய அண்ணனின் கூற்றை மட்டும் எடுத்துக்கொண்டு தீர்ப்பளித்திருக்கக்கூடாது என்று கூறி, மீண்டும் வழக்கை விசாரிக்க உத்தரவிட்டுள்ளனர்.
Burnaby RCMP இன்னொரு பக்கம், Natsumiயின் உடலில் Williamஉடைய DNA எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
Williamஉடைய அண்ணன், William தன் மனைவியுடன் மொபைலில் பேசும்போது, நான்தான் அவளைக் கொன்றேன் என்று கூறியதாக சொல்லியிருக்கிறார்.
முதலில், நான்தான் அவளைக் கொன்றேன் என்று William கூறினாரா, அல்லது நான்தான் அதை செய்தேன் என்று கூறினாரா என்பதை அவரது அண்ணனால் உறுதியாக தெரிவிக்க முடியவில்லை.
இரண்டாவது, William பேசியதை மட்டும்தான் அவர் கேட்டுள்ளார், மறுமுனையில் Williamஉடைய மனைவி என்ன பேசினார் என்பது அவருக்கு தெரியாது.
ஒருவேளை, நீங்கள் ஏன் Natsumi உயிரிழந்தது தெரியவந்ததும் பொலிசாரிடம் செல்லவில்லை என்று Williamஉடைய மனைவி கேட்க, நான்தான் அவளைக் கொன்றேன் என்று பொலிசார் நினைத்துவிடுவார்கள் என அஞ்சுகிறேன் என்றும் கூறியிருக்கலாம் அல்லவா என்று கேள்வி எழுப்பியுள்ளார்கள் நீதிபதிகள்.
ஆக, Williamஉடைய அண்ணன் அரைகுறையாக கேட்ட விடயங்களை வழக்கில் சாட்சியமாக எடுத்துக்கொண்டிருக்கவே கூடாது என்று கூறியுள்ள நீதிபதிகள், வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளனர்.