4 நாட்கள் ரூமுக்குள் பூட்டி வைத்து சித்ரவதை.. பிரித்தானிய பெண்ணுக்கு நடந்தது என்ன? அதிரவைக்கும் சம்பவம்
லண்டனில் இளம்பெண் ஒருவரை சுமார் 4 நாட்கள் ரூமுக்குள் அடைத்து வைத்து உணவின்றி கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனின் Kensington பகுதியில் வசித்து வருபவர் Abdul Awil(29). இவர் மீது இளம்பெண் ஒருவர் வீட்டில் பூட்டி வைத்து 4 நாட்கள் பாலியல் வன்புணர்வு செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த கொடூர சம்பவம் அக்டோபர் 28ஆம் முதல் 1ஆம் திகதி வரை நடந்துள்ளது. அந்த புகாரில் அந்த பெண் கூறியதாவது, என் பிறந்தநாள் அன்று Abdul Awil என்பவர் தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்தார். நான் தடுக்க முயன்ற போது என்னை அடித்து, உதைத்து வலுக்கட்டாயமாக அவருடைய வீட்டிற்கு அழைத்து சென்றார்.
அங்கு சுமார் 4 நாட்கள் என்னை உணவு, தண்ணீரின்றி ஒரு இருட்டு அறைக்குள் அடைத்து வைத்து சித்ரவதை செய்தார். அவர் அசந்த நேரத்தில் நான் அங்கிருந்து தப்பித்து உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டதாக அந்த பெண் தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து அந்த பெண் கொடுத்த புகாரின் அடைப்படையில் Abdul Awil என்பவரை பொலிஸ் கைது செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அதில் Abdul Awil, தான் செய்த குற்றத்தை ஒப்பு கொண்டார். அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் Abdul Awil செய்த தவறுக்கு சுமார் 22 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து உத்தரவிட்டனர். இளம்பெண்ணுக்கு நடந்த கொடூர சம்பவம் லண்டன் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.