வைரலாகும் இளைஞரின் தெருவோர காபி கடை! மெய்சிலிர்க்க வைத்த தருணம்
மும்பையில், இளைஞர் ஒருவர் சாலையோரத்தில் வைத்திருந்த காபி கடை முன்பு ஒட்டப்பட்ட போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.
காபி கடை
இந்தியாவின் பல முன்னணி நகரங்களின் சாலைகளில் உள்ள கடைகளின் முன்பு வைத்திருக்கும் விளம்பரங்கள் சில நேரங்களில் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் இருக்கும்.
அந்தவகையில், மும்பையைச் சேர்ந்த மயங்க் பாண்டே என்பவரது காபி கடை தற்போது பிரபலமாகி வருகிறது. அவரது, கடையின் முன்பு வைக்கப்பட்ட போஸ்டரில் இருந்த வாசகம் தான் அதற்கு காரணம்.
அந்த போஸ்டரில் எனது காபி ஷாப்பை உலக சந்தைக்கு கொண்டு செல்வதே என கனவு என்று எழுப்பட்டிருந்தது.
வைரலாகும் புகைப்படம்
பிரசாந்த் நாயர் என்பவர் தனது ட்விட்டர் பதிவில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அவர், அந்த பதிவில்,"மும்பை கண்டிவல்லியை அடுத்த தாக்கூர் கிராமத்தில் நான் நடந்து கொண்டிருந்தேன்.
அப்போது, தெருவோரத்தில் காபி கடை ஒன்று இருந்தது. அங்கு காபி, பிஸ்கட், சிநாக்ஸ் போன்றவை விற்பனை செய்யப்படும் என்று எழுதப்பட்டிருந்தது.
As I was walking yday, saw this guy with a small coffee setup named "The Coffee Bar"
— D Prasanth Nair (@DPrasanthNair) August 14, 2023
But what was interesting was the small poster that read "I want to take The Coffee Bar to the global market"
Admire his dream and hope he makes it someday.
It's the best thing to happen to a… pic.twitter.com/Zx1TR3bExy
மேலும், கடையின் முன்பு வைத்திருந்த போஸ்டரில், எனது காபி ஷாப்பை உலக சந்தைக்கு கொண்டு செல்வதே என கனவு என்பதை எழுதப்பட்டிருந்ததை பார்த்து மெய்சிலிர்த்தேன்" என கூறியிருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |