தலைமுடிக்காக பணியிலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்ட இளைஞர்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு
கருப்பின இளைஞர் ஒருவரை, அவரது முடியைக் காரணம் காட்டி ஒதுக்கிவைத்துள்ளது ஏர் பிரான்ஸ் விமான நிறுவனம்.
அலைக்கழிக்கப்பட்ட கருப்பின இளைஞர்
விமானப் பணியாளரான பாரீஸைச் சேர்ந்த அபுபக்கர் (Aboubakar Toure) என்னும் கருப்பின இளைஞர், தனது தலைமுடியை சுருள் சுருளாக பின்னி, தலைக்குப் பின் கட்டிவைத்ததற்காக, அவரை விமான பணியாளராக பணி செய்ய அனுமதி மறுத்துள்ளது ஏர் பிரான்ஸ் விமான நிறுவனம்.
தான் எப்படி தலை வாரிவந்தாலும் அதற்கு எதிர்ப்பு ஏற்படவே, விக் ஒன்றை வைத்து தனது தலைமுடியை மறைத்துக்கொண்டபிறகுதான் அவர் பணி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைவிட்ட நீதிமன்றங்கள்
தனக்கெதிராக பாகுபாடு காட்டப்பட்டதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்துள்ளார் அபுபக்கர்.
ஆனால், வேலையின்மை நீதிமன்றம், கீழ் நீதிமன்றம் ஒன்று என எல்லா இடத்திலும் அபுபக்கருக்கு எதிராகவே தீர்ப்புகள் வழங்கப்பட, மேல்முறையீட்டு நீதிமன்றம் ஒன்றை நாடினார் அவர்.
நேற்று அந்த நீதிமன்றம் அபுபக்கருக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
பெண்கள் தலையலங்காரத்துக்கு அனுமதியளிக்கும் ஏர் பிரான்ஸ் நிறுவனம், ஆண்களுக்கு அனுமதியளிக்க மறுத்ததால், அது பாரபட்சம் என கூறியுள்ள நீதிமன்றம், ஒருவர் எப்படி தலைவாரிக்கொள்கிறார் என்பது சீருடையின் பாகம் அல்ல என தெரிவித்துள்ளது.
இந்த தீர்ப்பைத் தொடர்ந்து அபுபக்கர் விமான நிறுவனம் மீது இழப்பீடு கோர வழி திறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Image - Facebook