டோனி-ரெய்னாவை பயிற்சி போட்டியில் திணற வைத்த இளம் வீரர்! எப்படி போடுறார் பாருங்க: வைரலாகும் வீடியோ
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பயிற்சி ஆட்டத்தின் போது, ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இளம் வீரர் தன்னுடைய அபார பந்து வீச்சின் போது மூலம் டோனி மற்றும் ரெய்னாவை திணற அடித்துள்ளார்.
இந்தியாவில் இந்தாண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் தொடர் நாளை துவங்குகிறது. இதில் முதல் ஆட்டத்தில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
கடந்த முறை சொதப்பிய சென்னை அணி இந்த முறை கோப்பையை வென்றாக வேண்டும் என்ற எண்ணத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
சென்னை அணி இந்த முறை தங்கள் அணியில் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது.
ராபின் உத்தப்பா, மோயின் அலி, கிருஷ்ணப்ப கவுதம் ஆகியோரை ஏலத்தில் எடுத்து இருக்கிறது.
Afghanistan's Fazalhaq Farooqi Bowling to Captain @msdhoni & @ImRaina During Practice Game ?#WhistlePodu #CSK #IPL2021 pic.twitter.com/Jwm0CMeV0C
— Chennai Super Kings FC (@TeamSuperKings) April 6, 2021
குறிப்பாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஃபசல்ஹாக் பாரூக்கி வலைப்பயிற்சி பவுலராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
சமீபத்தில் ஆப்கானிஸ்தான் அணியில் அறிமுகமாகியிருக்கும் இவர் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் அனைவராலும் கவரப்பட்டார்.
இவர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் முதல் ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளராக இருக்கிறார்.
இந்த வலைப் பயிற்சியில் அவர் சிறப்பாக பந்துவீசினால் அடுத்த ஆண்டு சென்னை அணியில் தேர்வாகவும் வாய்ப்பு இருப்பதால், அவர் பயிற்சி ஆட்டத்தில் தனது பந்துவீச்சால் டோனி, சுரேஷ் ரெய்னா போன்ற வீரர்களை திணற வைத்து வருகிறார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.