இலங்கை பின்னணி கொண்ட சுவிஸ் இளம்பெண் குறித்து வெளியாகியுள்ள சமீபத்திய செய்தி ஒன்று...
சுவிட்சர்லாந்தில் பிறந்த பிரியா ரகு, இலங்கைப் பின்னணி கொண்டவர்.
தற்போது ‘ஆடலாம் வா’ என்னும் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார் அவர்.
பிரியா ரகுவின் பெற்றோர் இலங்கையிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்ந்தவர்கள்.
1980களில் இலங்கை உள்நாட்டு யுத்தத்தின்போது சுவிட்சர்லாந்துக்கு அவர்கள் புலம்பெயர்ந்த நிலையில், சுவிட்சர்லாந்தில் பிரியா பிறந்தாலும், அவரது பெற்றோர் தங்கள் தாய்நாட்டின் கலாச்சாரம் குறித்து கற்பித்தே அவரை வளர்த்துள்ளார்கள்.

image - tamilguardian
பிரியாவுக்கு சிறுவயதிலேயே இசையின் மீது மிகுந்த ஆர்வம் இருந்தாலும், ஆரம்பத்தில் அவரது பெற்றோர் அவர் முழுநேரமும் இசையில் செலவிட ஒப்புதல் அளிக்கவில்லையாம்.
ஆனாலும், பிரியாவால் இசையில்லாமல் இருக்கமுடியவில்லை. இசைத்துறையில் நுழைந்து சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளார் அவர்.
தற்போது, ’ஆடலாம் வா’ என்னும் பாடலை வெளியிட்டுள்ளார் பிரியா. இருள் சூழ்ந்த நாட்களில் நம்பிக்கையை அளிக்கும் ஒரு பாடல் இது என்று கூறும் பிரியா, இந்த பாடலைக் கேட்டால் தானாகவே ஆட்டமும் வரும் என்கிறார்.

image - tamilguardian

image - tamilguardian

image - tamilguardian