மன்னர் சார்லசின் முடிசூட்டுவிழாவுக்கு சிக்கலை ஏற்படுத்த முடிவு செய்துள்ள இளம்பெண்
ஏற்கனவே இங்கிலாந்து திருச்சபை விவாகரத்தான, மனைவிக்கு துரோகம் செய்த ஒருவரை மன்னராக முடிசூட்டாது என ஒரு செய்தி உலவுகிறது.
மன்னரின் முடிசூட்டுவிழா திட்டமிட்டபடி நடக்காது என ஒரு ஜோதிடரும் கூறியுள்ளார்.
இந்நிலையில், சார்லசின் முடிசூட்டுவிழாவுக்கு இன்னொரு சிக்கல் உருவாகியுள்ளது.
Image: PA
எனவே, மன்னர் சார்லசுடைய முடிசூட்டுவிழா நேரத்தில் விர்ஜினியாவின் புத்தகம் வெளியாக இருப்பதால், மீண்டும் அவர் ஒரு தலைவலியை சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இளவரசர் ஆண்ட்ரூ, பருவம் எய்தாத வயதில் தன்னுடன் பாலுறவு வைத்துக்கொண்டதாக விர்ஜினியா (Virginia Giuffre, 39) என்னும் அமெரிக்கப் பெண் குற்றம் சாட்டியதும், பின்னர் ராஜ அரண்மனை மற்றும் விர்ஜினியா இருவரும் நீதிமன்றத்துக்கு வெளியே அந்தப் பிரச்சினையை பேசித் தீர்த்துக்கொண்டதும் நினைவிருக்கலாம். இருதரப்பினருக்கும் இடையிலான அந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதி, ஓராண்டுக்கு விர்ஜினியா இந்த விடயம் குறித்து வெளியே பேசக்கூடாது என்கிறது.
ஆனால், அந்த ஓராண்டு காலகட்டம், இந்த மார்ச் மாதத்துடன் முடிவுக்கு வருகிறது!
நேரம் பார்த்து அடுத்த குண்டை போட திட்டமிட்டுள்ள விர்ஜினியா
இந்நிலையில், மன்னருடைய முடிசூட்டுவிழா நேரத்தில் தனக்கும் இளவரசர் ஆண்ட்ரூவுக்கும் இடையிலான தொடர்பு குறித்து விர்ஜினியா புத்தகம் ஒன்றை வெளியிட இருப்பதாக அந்த புத்தகத்தை வெளியிட இருக்கும் நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
Image: PA
புத்தகங்களைப் பொருத்தவரை, அவை வெளியிடப்படும் நேரத்தைப் பொருத்துதான் அவை இலாபத்தை ஈட்டும். விர்ஜினியாவின் புத்தகத்துக்காக அவருக்கு பணம் கொடுத்துள்ள நிறுவனம், தான் போட்ட பணத்தை இலாபத்துடன் திரும்ப எடுக்கத்தான் முயலும்.
ஆகவே, மன்னருடைய முடிசூட்டுவிழாவைவிட அந்த புத்தகத்தை வெளியிடுவதற்கு பொருத்தமான நேரம் வேறு அமையும் என்று சொல்லமுடியாது என்கிறார் அவர் .
Image: US District Court - Southern Dis