லண்டனில் ஜன்னல் வழியாக பெண்களை நோட்டமிட்ட இளைஞன்! அடுத்தடுத்த சம்பவங்கள்.. சிசிடிவி புகைப்படத்துன் முக்கிய தகவல்
லண்டனில் ஜன்னல் வழியாக பெண்களை நோட்டமிட்ட இளைஞர் தொடர்பான முக்கிய தகவலை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
கிழக்கு லண்டனின் ஹாக்னேவில் உள்ள எஸ்டேட்க்குள் கடந்த டிசம்பர் மாதம் 15ஆம் திகதி மர்ம நபர் நுழைந்துள்ளார்.
பின்னர் அங்கிருந்த குளியலறை ஜன்னல் வழியாக அவர் பெண்களை உளவு பார்த்து நோட்டமிட்டுள்ளார்.
அப்போது அந்த இடத்தின் கதவு அருகே இருந்த சிசிடிவி கமெராவில் அந்த இளைஞன் நின்றிருந்த காட்சி பதிவாகியிருந்தது. இதையடுத்தே பொலிசில் அப்போது புகார் கொடுக்கப்பட்டது.
இதே போல வேறு அடுக்குமாடி வீடுகளுக்கும் சென்றுள்ள மர்மநபரான அந்த இளைஞர் அதே போல ஜன்னல் வழியாக பெண்களை எட்டி பார்த்திருக்கிறார்.
இதையடுத்து பொலிசார் குறித்த இளைஞர் தொடர்பான சிசிடிவி புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
அவரின் வயது 18ல் இருந்து 25க்குள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என கூறியுள்ளனர்.
