அடையார் ஆனந்த பவன் பங்குகள் தனியாருக்கு விற்பனை! கோடிகளை குவிக்க போகும் ஸ்ரீனிவாச ராஜா குடும்பம்
பாரம்பரிய உணவகமான அடையார் ஆனந்த பவன் தனது வியாபாரத்தை விரிவுபடுத்த தனது பங்குகளை தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்களிடம் விற்க முடிவு செய்துள்ளது.
அடையார் ஆனந்த பவன்
கடந்த 10 வருடங்களில் தமிழ்நாட்டில் இருக்கும் பாரம்பரியமான உணவகங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும், பல்வேறு நாடுகளிலும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
அதில் முக்கியமான ஒன்று அடையார் ஆனந்த பவன் (A2B). இந்த உணவகமானது தனது வியாபாரத்தை விரிவுபடுத்த தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்களிடம் பங்குகளை விற்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் முதலீட்டைத் திரட்டும் பணியை செய்யவுள்ளது.
இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் இந்திய உணவகங்கள், உணவுப் பொருட்கள் நிறுவனங்கள் மீது தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள் கவனத்தை திரும்பியுள்ளது தான்.
அந்தவகையில் அடையார் ஆனந்த பவன் (A2B) என்னும் சாம்ராஜ்ஜியத்தை நிர்வாகம் செய்யும் ஸ்ரீனிவாச ராஜா குடும்பம் தனது கையிருப்பில் உள்ள பங்குகளை விற்று ரூ.1200 கோடி வரை நிதி திரட்ட முடிவு செய்துள்ளது.
இதற்காக கையிருப்பில் உள்ள 35 சதவீத பங்குகளை விற்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின் மதிப்பு ரூ.3500 கோடிக்கு மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வந்துள்ளது.
ஆனால், இது தொடர்பான எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் அடையார் ஆனந்த பவன் வெளியிடவில்லை.
இந்த நிதி திரட்டும் பணியில் A2B-க்கு, வேதா கார்ப்பரேட் அட்வைடர்ஸ் (Veda Corporate Advisors) ஆலோசனை வழங்கவுள்ளதாக தகவல் வந்துள்ளது. அதோடு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படவும் முடிவு செய்துள்ளது.
1979 -ம் ஆண்டு தொடங்கப்பட்ட A2B நிறுவனமானது இந்தியா முழுவதும் 150 -க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டுள்ளது. மேலும், வெளிநாடுகளிலும் 10 கிளைகளைக் கொண்டுள்ளது.
2024 நிதியாண்டில் A2B -ன் மொத்த வருவாய் ரூ.1500 கோடி என்னும், லாபம் ரூ.100 கோடி எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
அடையார் ஆனந்த பவன் நிறுவனம் தனது பங்குகளை தனியார் நிறுவனத்திற்கு விற்று நிதி திரட்ட முயற்சிப்பது இது இரண்டாவது முறையாகும்.
முன்னதாக, கடந்த 2016 -ம் ஆண்டு Samara Capital, Westbridge Capital, Carlyle, KKR போன்ற தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தோல்வியில் முடிந்தது.
அதே நேரத்தில் இந்த நிறுவனத்தின் மதிப்பு ரூ.1800 கோடியாக மதிப்பிடப்பட்டது. தற்போது, நிறுவனத்தின் மதிப்பு 8 ஆண்டுகள் கழித்து ரூ.3500 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |