A66 சாலை விபத்து: பிரித்தானியாவில் மூடப்படும் பல பள்ளிகள்: இளைஞரின் இறுதி ஊர்வலம்
A66 crash Middlesbrough schools close early: A66 சாலை விபத்தில் உயிரிழந்த யாக்கூப் மத்துசியாக் என்ற நபரின் இறுதி ஊர்வலம் நடைபெற உள்ள நிலையில் மிடில்ஸ்பரோ(Middlesbrough) பகுதியில் உள்ள பள்ளிகள் முன்கூட்டியே மூடப்பட உள்ளன.
A66 சாலை விபத்து
கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரித்தானியாவின் மிட்ல்ஸ்பரோ (Middlesbrough) அருகே உள்ள A66 சாலையில் நடந்த துரத்தல் நடவடிக்கையின் போது வோக்ஸ்வேகன் பாசாட் காரும், காவல்துறையினரின் காரும் மோதிக் கொண்டது.

இந்த சம்பவத்தில் யாக்கூப் மத்துசியாக், கோல் வொர்த்தி, தியோ ரே, மகாய் சாடிங்டன் மற்றும் மைக்கேல் காஹில் ஆகிய 5 இளைஞர் மற்றும் 37 வயதான மேத்யூ பிளேட்ஸ் மற்றும் 38 வயதான டாம் க்ளஃப் ஆகிய 2 காவலர்கள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பள்ளிகள் மூடல்
உயிரிழந்த இளைஞர்களில் ஒருவரான யாக்கூப் மத்துசியாக் என்பவரின் இறுதி ஊர்வலம் மிடில்ஸ்பரோ பகுதியில் வெள்ளிக்கிழமையன்று நடைபெற உள்ளது.
சவுத் பேங்கில் உள்ள செயிண்ட் ஜான் தேவாலயத்தில் நடைபெறும் இந்த இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் மிடில்ஸ்பரோ பகுதியில் உள்ள பல பள்ளிகள் முன்கூட்டியே மூடப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சவுத் பேங்க் தொடக்கப் பள்ளி, அவுட்வுட் அகாடமி, செயின்ட் பீட்டர்ஸ் கத்தோலிக்க கல்லூரி மற்றும் செயின்ட் மார்கரெட் கிளிதோரோ கத்தோலிக்க தொடக்கப்பள்ளி ஆகிய நான்கு பள்ளிகள் மதிய வேளையில் மூடப்படுவதாக அறிவித்துள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |