ஆதார் தொடர்பில் அமுலுக்கு வரும் புதிய விதி! மார்ச் 15க்குள் இதை செய்துவிடுங்கள்
ஆதார் அட்டையில் இலவசமாக விவரங்களை ஒன்லைனில் புதுப்பிப்பதற்கான காலக்கெடு மார்ச் 14 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிய விதி
மார்ச் 14ஆம் திகதிக்குள் ஆதார் அட்டையில் பெயர், விலாசம் உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏனெனில், 15ஆம் திகதியில் இருந்து மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றால் கட்டணம் செலுத்த வேண்டுமாம். இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, மார்ச் 15 முதல் ஆதார் அட்டையில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் ரூ.50 செலவு செய்ய வேண்டும்.
இதற்கு முன்பாக டிசம்பர் 15ஆம் திகதி கடைசி என்று நிர்ணயிக்கப்பட்டு, பின்னர் மார்ச் 14ஆம் திகதி தான் இறுதி என்று காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.
மறுமதிப்பீடு
தற்போதைய அறிவிப்பின் படி, உங்கள் ஆதார் அட்டையில் ஏதேனும் மாறுதல்கள் செய்ய வேண்டும் என்றால் மார்ச் 14க்குள் இலவசமாக செய்து கொள்ளலாம்.
இந்த சேவை மை ஆதார் போர்ட்டலில் மட்டுமே இலவசமாக கிடைக்கும். பொதுசேவை மையங்களில் ரூ.50 கட்டணம் பெறப்படும்.
இதற்கிடையில், 10 ஆண்டுகளாக Update செய்யாமல் வைத்திருக்கும் ஆதார் அட்டைக்காரர்கள், அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று ஆவணங்களை Upload செய்து தங்களது மக்கள்தொகை விவரங்களை மறுமதிப்பீடு செய்யுமாறு UIDAI கேட்டுக் கொண்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |