தினமும் ரூ.87 முதலீடு செய்து வந்தால் போதும்... ரூ.11 லட்சங்களை அள்ளித்தரும் LIC-ன் புதிய திட்டம்
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம், பெண்களுக்கான சிறப்புச் சலுகைகள் உட்பட பல்வேறு வருமானக் குழுக்களுக்கான திட்டங்களை வழங்கி வருகிறது.
ஆதார் ஷீலா திட்டம்
அந்தவகையில், LIC நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் ஆதார் ஷீலா திட்டம் மூலமாக 10 ஆண்டுகளில் ரூ.11 லட்சம் வரையில் பெற முடியும். இந்த திட்டமானது பெண்களுக்கானது என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் முதிர்ச்சியின் போது நிலையான வருவாயை வழங்குகிறது. மட்டுமின்றி பாலிசி காலத்தின் போது பாலிசிதாரருக்கு மரணம் ஏற்பட்டால் குடும்பத்திற்கு நிதி உதவியை வழங்குகிறது.
ஆதார் அட்டை வைத்திருக்கும் பெண்கள் மட்டுமே இந்த திட்டத்தால் பயன்பெற முடியும். 8ல் இருந்து 55 வயதுக்கு உட்பட்ட பெண்கள் இதில் பயன்பெறலாம். மேலும், பாலிசி காலத்தை 10 முதல் 20 ஆண்டுகள் வரை தெரிவு செய்யலாம்.
70 வயதில் ரூ.11 லட்சம் பெறலாம்
அத்துடன் பாலிசி முதிர்ச்சியடையும் போது பயன்பெறும் பெண்ணின் அதிகபட்ச வயது 70 ஆக இருக்கலாம் என குறிப்பிட்டுள்ளனர். அதாவது 55 வயதுடைய பெண் ஒருவர் 15 ஆண்டுகளுக்கான பாலிசியை முன்னெடுக்கலாம்.
மேலும், இந்த திட்டத்தின் மூலமாக நீங்கள் ரூ. 11 லட்சம் பெற விரும்பினால், தினசரி ரூ.87 முதலீடு செய்ய வேண்டியிருக்கும். அதாவது ஆண்டுக்கு ரூ.31,755 செலுத்த நேரிடும்.
10 ஆண்டுகளில் உங்கள் மொத்த வைப்புத் தொகை என்பது ரூ.317,550 என இருக்கும். 70 வயதில், நீங்கள் டெபாசிட் செய்த தொகையை திரும்பப் பெற முடிவு செய்தால், நீங்கள் ரூ.11 லட்சம் நிதியைப் பெறலாம்.
மேலும், உங்கள் நிதி நலனை கருத்தில் கொண்டு முதலீடு செய்வதற்கும் உங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பை வழங்குவதற்கும் இது ஒரு சிறப்பான வாய்ப்பாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |