அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா - ஆதவ் அர்ஜுனா விளக்கம்
தவெக குதிரை பேர அரசியலில் ஈடுபடுவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கமளித்துள்ளார்.
அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா
அதிமுக எம்எல்ஏக்கள் இரு தரப்பாக பிரிந்து எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி தலைமையில் செயல்பட்டு வரும் நிலையில், நேற்று அதிமுகவை சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் சபாநாயகரை சந்தித்து தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை சந்தித்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

இதனை தொடர்ந்து, தவெக தமிழ் நாட்டில் குதிரை பேர கலாச்சாரத்தை, கீழ்த்தரமான அரசியலை செய்வதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் இதனை கண்டித்து அறிக்கை வெளியிட்டார்.
கட்சி தடை தாவல் சட்டத்தின் படி அந்த எம்.எல்.ஏக்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் ராஜினாமாவை எப்படி ஏற்றனர் என எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் சபாநாயகரை சந்தித்துள்ளனர்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
இந்நிலையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்து வருகிறார்.
இதில் பேசிய அவர், "திமுக ஜெயிக்க கூடாது என்பதற்காக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் தேர்தலின் போதே எங்களுடன் இணைந்து வேலை பார்த்தார்கள். அதனால் தான் பெருவாரியான வெற்றியை பெற்றோம்.
தலைமை செயலகம் கட்சி அலுவலகம் போல் இல்லை. அவர்கள் முதலில் சபாநாயகரை சந்தித்து பதவியை ராஜினாமா செய்த பின்னர் அமைச்சர் என்ற முறையில் என்னை சந்தித்தார்கள். அதன் பின்னர் முதல்வரை சந்தித்தார்கள்.
இன்று கட்சி அலுவலகத்தில் தான் கட்சியில் இணைகிறார்கள். இது கட்சி தாவல் இல்லை" என கூறியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |