இன்று ஆடி அமாவாசை: ராமேஸ்வர அக்னி தீர்த்த கடலில் குவிந்த மக்கள்
ராமேஸ்வரத்தில் இன்று ஆடி அமாவாசையொட்டி சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அக்னி தீர்த்த கடலில் இறந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டு வருகின்றனர்.
அக்னி தீர்த்த கடலில் குவிந்த மக்கள்
இன்று நாடு முழுவதும் இந்துக்கள் ஆடி அமாவாசை அனுசரித்து வருகிறார்கள். இந்த ஆடி அமாவாசையில் புனித ஸ்தலங்களில் இறந்த முன்னோர்களுக்கு நிதி கொடுத்து புனித நீராடி வருகிறார்கள்.
ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயில் மிகவும் பிரசித்திப் பெற்ற கோவிலாகும். இக்கோவிலில் உள்ள ஸ்ரீராமன் சிவனை வழிபாடு செய்தால் பாவம் விமோட்சனம் பெறலாம் என்பது ஐதீகம்.
இதனால், இந்துக்கள் ஒவ்வொரு அமாவாசை வரும்போதும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோவிலுக்கு வருகை தந்து அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி வழிபாடு செய்து முன்னோர்களுக்கு நிதிகொடுத்து வருவது வழக்கம்.
இந்நிலையில், இன்று ஆடி அமாவாசையையொட்டி நேற்றிலிருந்து இக்கோவிலுக்கு மக்கள் படையெடுத்து வருகிறார்கள்.
இன்று மட்டும் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அக்னி தீர்த்த கடலில் நீராடி இறந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். பல்லாயிரக்கணக்கானோர் இக்கோவிலில் குவிந்து வருவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |