ஆடி அமாவாசை: இந்த உணவுகள் சாப்பிடக்கூடாதாம்!
அமாவாசை என்பது இந்துக்களின் முக்கிய விரதநாளாகும்.
தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாசையன்று முன்னோர்க்கு ‘ பிதுர் கடன்’ கொடுத்தால் அது அவர்களை நேரடியாக சென்றடையும் என்பதும் நம்பிக்கை.
அந்த வகையில் ஆடி, புரட்டாசி, தை ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை நாட்கள் சிறப்பாகும். இந்நிலையில் ஆடி மாதத்தில் 2 அமாவாசைகள் உள்ளது. அதில் ஜூலை 17 ம் திகதி முதல் அமாவாசை வந்தது. ஆகஸ்ட் 16-ம் தேதி 2-வது அமாவாசை வருகிறது. அதாவது நாளைய தினம் இந்த அமாவாசை வருகின்றது.
ஆகஸ்ட் 15 செவ்வாய்க்கிழமை மதியம் 12.42 மணிக்கு தொடங்குகிறது. அடுத்த நாள் ஆகஸ்ட் 16 மதியம் 3.07 வரை அமாவாசை திதி உள்ளது. எனவே சூரிய உதயம் அடிப்படையில் ஆகஸ்ட் 16-ம் திகதி அமாவாசை கணக்கிடப்படுகிறது.
இன்றைய நாளில் என்ன செய்ய வேண்டும் எந்த கடமைகள் செய்ய வேண்டும் என்று விரிவாக இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.
பித்ரு தோஷ பரிகாரம் செய்ய உகந்த நேரம்
காலை 5.51 முதல் 9.08 வரை நீராடி தானம் செய்யலாம். காலை நீராடிவிட்டு, பூணூல் அணிந்து முன்னோர்களை வணங்கி கருப்பு எள், நீர் வைத்து வழிபட வேண்டும். மேலும் பிண்ட தானம், அன்னதானம், பஞ்சபலி கர்மா போன்றவை செய்தால் பித்ரு தோஷம் நீங்கும். பித்ரு தோஷ பரிகாரங்களை ஆடி அமாவாசை அன்று காலை 11.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை செய்ய வேண்டும்.
வீட்டில் முன்னோர் படங்களுக்கு பூக்களிட்டு, பிடித்த உணவுகளைப் படையலிட்டு வணங்கி காக்கைக்கு வைத்த பின்னரே சாப்பிட வேண்டும்.
பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ வழிப்பாட்டில் ஈடுப்படக்கூடாது.
அமாவாசைக்கு பயன்படுத்தக்கூடாத காய்கறிகள்
1. முட்டகோஸ்
2.நூக்கல்
3.முள்ளங்கி
4.கீரையில் அகத்திகிரை செய்யலாம்
5.பீன்ஸ்
6.உருளைகிழங்கு
7.காரட்
8.கத்தரிக்காய்
9.வெண்டைக்காய்
10.காலிஃபளவர்
11.ப்ரெக்கோலி
12.பட்டாணி
13.வெங்காயம்
14.பூண்டு
15.பெருங்காயம்
16.தக்காளி
17.கத்தரிக்காய்
18.சொள சொள
19.சுரக்காய்
20.முருங்கக்காய்
21.கோவக்காய்
22.பீட்ருட்
23.பச்சைமிளகாய்
அமாவாசையில் சேர்க்க வேண்டிய காய்கறிகள்
1. அவரக்காய்
2. புடலங்காய்
3. பயத்தங்காய்
4. வாழைத்தண்டு
5. வாழைப்பூ
6. வாழைக்காய்
7. சக்கரவள்ளி
8. சேனை
9. சேப்பங்கிழங்கு
10. பிரண்டை
11. மாங்காய்
12. இஞ்சி
13. நெல்லிக்காய்
14. மாங்கா இஞ்சி
15. பாரிக்காய்
16. பாகற்காய்
17. மிளகு
18. கரிவேப்பிலை
19. பாசிப்பருப்பு
20. உளூந்து
21. கோதுமை
22. வெல்லம்
23.வெள்ளை பூசணிக்காய்
24. மஞ்சள் பூசணிக்காய்
எந்த பொருட்களை தானம் செய்ய வேண்டும்?
-
அன்னதானம்
- உப்பு தானம்
- கோ தானம்
- ஆடை தானம்
- நெய் தானம்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |