குழந்தை பாக்கியம் தரும் அம்பாள்; நெல்லையப்பர் கோவிலில் ஆடிபூர திருவிழா
இந்தியாவில் நெல்லை பகுதியில் நெல்லையப்பர் கோவிலில் ஆடிபூர திருவிழா வருகின்ற 12ம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.
ஆடிபூர திருவிழா
இந்த ஆண்டுக்கான ஆடிபூர திருவிழாவனது வருகின்ற 12ம் திகதியன்று காலை 6 மணிக்கு காந்திமதி அம்பாள் சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது.
4ம் நாள் திருவிழாவான வளைகாப்பு வைபவம் 15ம் திகதி காலை 10 மணிக்கு ஆரம்பிக்கபட்டு, இரவு 8 மணிக்கு காந்திமதி அம்பாள் வீதி உலா நடக்கவுள்ளது.
அடுத்ததாக 21ம் திகதி மாலை 6.30 மணி முதல் 8.30 மணிக்குள் அம்பாள் சன்னதி முன்புள்ள ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து ஆடிப்பூர முளைக்கட்டு திருவிழா நடைபெறவுள்ளது.
முளைக்கட்டு திருவிழா என்றால் என்ன?
அம்பாள் கர்ப்பிணி போல் அலங்கரிக்கப்பட்டு வயிற்றில் முளைகட்டிய பாசிபயிற்றை கட்டி வைத்து அம்பாளுக்கு வளைகாப்பு நடத்தி சீமந்தம் சீர்வரிசைகள் செய்து அனைத்து வகை பலகாரங்களும் படைக்கப்பட்டு சிறப்பு அலங்கார தீபாராதனை எடுத்தல் தான் முளைக்கட்டு திருவிழா.
மேலும் இந்த முளைகட்டிய பாசிபயிரை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு குழந்தை பாக்கியம் சீக்கிரமாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |