உலகக்கோப்பையில் அஸ்வின் விளையாடுவாரா? முன்னாள் வீரர் கூறிய விடயம்
ஆசியக் கோப்பைக்கான அணியில் அஸ்வினுடன் சேர்த்து ஜடேஜா, சாஹல், பிஷ்னாய் என நான்கு பேர் உள்ளனர்
அஸ்வின் 113 ஒருநாள் போட்டிகளில் 151 விக்கெட்டுக்களையும், 54 டி20 போட்டிகளில் 64 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்
தமிழக வீரர் அஸ்வின் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அஷ்வின் இடம்பெறுவாரா என்ற கேள்விக்கு முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பதிலளித்துள்ளார்.
ஆசியக் கோப்பை தொடர் ஆகத்து 27ஆம் திகதி தொடங்க உள்ளது. இந்த தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில், தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெற்றுள்ளார்.
File
ஆனால் பிளேயிங் 11யில் அவர் களமிறங்குவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில் அஸ்வின் குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறுகையில்,
'ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த உலகக் கோப்பையிலும் திடீரென தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் தான் சமீபத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் அஸ்வின் கொண்டுவரப்பட்டார்.
எனவே, அவர் மீண்டும் உலகக் கோப்பையில் விளையாடுவார் என்று தான் தெரிகிறது. எந்த வகையான சுழற்பந்து வீச்சாளர் தேவை என்பது தான் முக்கியமே தவிர, யார் சரி யார் தவறு என்பது பற்றியது இங்கு ஒரு விடயமே இல்லை என்று நான் நினைக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.
PC: Twitter