டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் தமிழன் நடராஜன் இடம்பெறுவாரா? பிரபலம் கூறிய கருத்து
தமிழக வீரர் நடராஜன் உடல் தகுதி அடைந்துவிட்டால் அவருக்கு நிச்சயம் இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான ஆகஸ் சோப்ரா அளித்த பேட்டியில், இந்திய டி20 அணியில் ஷமி எப்போதுமே ஒரு முக்கியமான தேர்வாக இருந்ததில்லை.
ஏனெனில் அவரைவிட சிறந்த பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் இருக்கின்றனர். அவர்கள் தான் எப்பொதுமே முதல் தேர்வாக இருப்பார்கள். பஞ்சாப் அணிக்காக அவர் கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்து வீசினார்.
ஆனால் அதற்கடுத்து காயமடைந்த அவர் இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்து வீசவில்லை. நீங்கள் டி20 அணியில் முஹம்மது ஷமியை தேர்வு செய்ய நினைத்தால், அந்த வாய்ப்பானது அவருக்கு அவ்வளவு எளிதில் கிடைத்து விடாது.
ஒருவேளை அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் அடுத்து வரும் ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக பந்து வீசினால் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.
தமிழக வீரரான நடராஜன் ஐபிஎல் தொடரில் காயமடைந்தார். அவர் முழு உடல் தகுதி அடைந்துவிட்டால் நிச்சயம் இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.