அரைசதம் விளாசி 6 விக்கெட் வீழ்த்திய வீரர்! கதிகலங்கிய அவுஸ்திரேலிய அணி (வீடியோ)
பாகிஸ்தான் அணி வீரர் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டாவது முறையாக 6 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
ஆமீர் ஜமால்
ஆமீர் ஜமால் அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 313 ஓட்டங்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.
SCG SPECIAL ?
— Pakistan Cricket (@TheRealPCB) January 5, 2024
Aamir Jamal's sensational six-fer, his second of the series! ?
? @cricketcomau #AUSvPAK pic.twitter.com/37EgVOJWiU
மூன்றாவது டெஸ்டில் விளையாடும் ஆமீர் ஜமால் 82 (97) ஓட்டங்கள் விளாசினார். அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது.
வார்னர் 34 ஓட்டங்களில் அவுட் ஆக, கவாஜாவை 47 ஓட்டங்களில் ஆமீர் ஜமால் வெளியேற்றினார். அதன் பின்னர் ஸ்மித் 38 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அணியின் ஸ்கோர் 187 ஆக உயர்ந்தபோது அரைசதம் விளாசிய லபுசாக்னே 60 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
சரிந்த விக்கெட்டுகள்
பின்னர் ஆமீர் ஜமால் தனது தாக்குதலை தொடங்கினார். அவரது பந்துவீச்சில் ஹெட் (10), மிட்செல் மார்ஷ் (54), கம்மின்ஸ் (0) ஆகியோர் மளமளவென சரிந்தனர்.
மேலும் கடைசி இரண்டு விக்கெட்டுகளான நாதன் லயன் (5), ஹேசல்வுட் ஆகியோரும் ஆமீர் ஓவரில் ஆட்டமிழந்தனர். இதனால் அவுஸ்திரேலிய அணி 299 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனதால், பாகிஸ்தான் அணி 14 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது.
Twitter (@TheRealPCB)
வேகப்பந்துவீச்சில் கதிகலங்க வைத்த ஆமீர் ஜமால் 6 விக்கெட்டுகளை அள்ளினார். ஆகா சல்மான் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.
தற்போது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ள பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 20 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
Twitter (@TheRealPCB)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |