கடனில் சிக்கித் தவித்தோம்! அப்பாவை நினைத்து நேர்காணலில் அழுத நடிகர் அமீர் கான்
பிரபல இந்தி நடிகர் அமீர் கான் தனது தந்தை குறித்து நேர்காணலில் பேசும்போது உணர்ச்சிவசப்பட்டு அழுதார்.
தந்தை குறித்து பேசிய அமீர் கான்
இந்தி திரைப்பட உலகில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டார் நடிகராக வலம் வருபவர் அமீர் கான். இவர் கடைசியாக நடித்த லால் சிங் சத்தா திரைப்படம் தோல்வியைத் தழுவியது.
இந்த நிலையில் ஊடகம் ஒன்றுக்கு அமீர்கான் அளித்த பேட்டியில் தனது தந்தை குறித்து உணர்ச்சிவசமாக பேசினார். அவர் கூறும்போது, 'என் அப்பா மிகவும் எளிய மனிதர். அவர் சிக்கலில் இருப்பது எங்களுக்கு வலிக்கும். அவரைப் பார்க்கும்போது என் சிறுவயதில் கவலையாக இருக்கும். கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து அழைப்பார்கள். அப்பா அவர்களுக்கு தொலைபேசியில் தொடர்ந்து பதில் அளிப்பார்.
பல நெருக்கடிக்கு இடையில் தான் எனக்கு பள்ளிக்கட்டணம் செலுத்தப்பட்டது. தயாரிப்பாளராக அவர் கஷ்டப்பட்டதைப் பார்த்திருக்கிறேன். அதனால் தான் நான் எனது தயாரிப்பாளர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பார்த்துக் கொள்கிறேன்' என தெரிவித்தார்.
கண்கலங்கிய அமீர் கான்
அப்பாவை குறிப்பிட்டு பேசும்போது அமீர் கான் உணர்ச்சிவசப்பட்டு அழுதார். அமீர் கானின் தந்தையான தாஹிர் ஹுசைன் 10 படங்களை தயாரித்ததுடன், சில படங்களில் நடித்திருந்தார்.
மேலும் அமீர் கானை வைத்து Tum Mere Ho படத்தை இயக்கிய அவர், தனது 71வது வயதில் 2010ஆம் ஆண்டு காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.