மூன்றாவது திருமணம் செய்யும் பிரபல நடிகர்
பிரபல பாலிவுட் நடிகரான ஆமிர் கான் மூன்றாவது முறையாக திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்.
மூன்றாவது திருமணம்
பிரபல பாலிவுட் நடிகரான ஆமிர் கான், தன் தோழியான கௌரியை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆமிர் கான், ஏற்கனவே தன் முதல் மனைவியான ரீனா தத்தாவை 2002ஆம் ஆண்டு பிரிந்தவர்.

2005ஆம் ஆண்டு, ஆமிர், திரைப்பட இயக்குநரான கிரண் ராவ் என்னும் பெண்ணை திருமணம் செய்துகொண்டார். 2021ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தார்கள்.
தற்போது, மூன்றாவது முறையாக கௌரி (Gauri Spratt) என்னும் பெண்ணை திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் ஆமிர் கான்.
ஜூலை மாதம் 5ஆம் திகதி, எளிமையாக இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
பெங்களூரில் பிறந்த கௌரி, ஒப்பனையாளரும், தொழில் முனைவோரும் ஆவார்.

கௌரியும் ஆமிர் கானும் 25ஆண்டுகளுக்கு முன் ஏற்கனவே சந்தித்துள்ள நிலையில், பின்னர் இருவருக்கும் இடையில் தொடர்பே இல்லாமல் இருந்துள்ளது.
மீண்டும் 2024ஆம் ஆண்டு இருவரும் சந்திக்க, இருவரும் மீண்டும் காதலிக்கத் துவங்கியுள்ளார்கள். கௌரியின் தந்தை தமிழ் பிரித்தானிய பின்னணி கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |