மகர ராசியில் சனி! ஆனி மாதம் பல பிரச்சினைகளை சந்திக்கபோகும் ராசிக்காரர் யார்?

horoscope
By Kishanthini Jun 15, 2021 10:42 AM GMT
Report
Courtesy: oneindia

தமிழ் மாதங்களில் சித்திரை வருடப்பிறப்பு தொடங்கி வரும் மூன்றாவது மாதம் ஆனி மாதமாகும். மிதுனம் ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் இது மிதுனமாதம் என்றும் அழைக்கலாம்.

இந்த மாதம் சூரியன் மிதுனம் ராசியில் சஞ்சரிக்கிறார். ரிஷப ராசியில் ராகு புதன், மிதுனம் ராசியில் உள்ள சுக்கிரன் ஆனி 8 ஆம் தேதி கடகம் ராசியில் உள்ள செவ்வாய் உடன் இணைகிறார்.

இந்த மாதம் குரு பகவான் வக்ர சஞ்சாரம் ஆரம்பமாகிறது. புதன் வக்ர சஞ்சாரம் முடிகிறது. புதன் 23ஆம் தேதி மிதுன ராசியில் பயணம் செய்கிறார்.

விருச்சிகம் ராசியில் கேது சஞ்சரிக்கிறார். மகர ராசியில் சனி கும்ப ராசியில் குரு வக்ர நிலையில் பயணம் செய்கிறார். இதனடிப்படையில் இந்த ஆனி மாதம் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகின்றது என பார்ப்போம். 

மேஷம்

மேஷ ராசிக்கு மூன்றாமிடத்தில் சூரியன் பயணம் செய்கிறார். வேலை விசயமாக வெளியூருக்கு செல்லும் நிலை உண்டாகும் வியாபாரம் விருத்தியாகும். முயற்சி ஸ்தானமான மூன்றாவது வீட்டில் சூரியன் பயணம் செய்வது சிறப்பு. உங்களின் பண பிரச்சினை தீரும்.

அப்பாவின் உடல் நலனில் அக்கறை தேவை. அரசியல், அரசாங்க வேலையில் இருப்பவர்களுக்கு பிரச்சினை ஏற்படும்.

இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான மாற்றம் ஏற்படும். ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். சுக ஸ்தானத்தில் ராசி நாதன் சுக்கிரன் உடன் இணைவதால் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.

ஆனி மாதம் 8ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை.

ரிஷபம்

சூரியன் இரண்டாமிடத்தில் ராகு உடன் சஞ்சரிப்பதால் சம்பள உயர்வு கிடைக்கும். பேச்சில் அதிகாரம் அதிகரிக்கும். கவனமாக பேசுங்க இல்லாவிட்டால் குடும்பத்தில் சிக்கல்கள் வரலாம் கோபத்தை கட்டுப்படுத்துங்க.

வீட்டில் தம்பதியரிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறிதளவு பாதிக்கும் கவனமாக இருக்கவும். வேலைக்குச் செல்லும் போது கவனமாக பாதுகாப்புடன் செல்லவும்.

நோய் தொற்று பரவும் காலம் என்பதால் கவனம் தேவை. அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். என்றாலும் அதற்கேற்ப ஆதாயமும் கிடைக்கும் என்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். ஆனி 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை.

மிதுனம்

உங்க தைரிய ஸ்தானதிபதி சூரியன் உங்க ராசியில் சஞ்சரிப்பதால் வளர்ச்சியும் வெற்றியும் கிடைக்கும். சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் சுக்கிரன் உடன் இணைந்து இருக்கிறார் பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருக்கும். தேவையற்ற செலவுகள் ஏற்படாது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும்.

தலைமைப் பதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பண வரவுகள் சராசரியாக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு அலுவலகத்தில் பணிச் சுமை கூடும். அஷ்டமத்து சனியால் உடல் அசதியும், மனதில் சோர்வும் உண்டாகும்.

கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் கவனமாக இருக்கவும். புதன்கிழமை பெருமாளை நினைத்து வணங்க பாதிப்புகள் நீங்கும். ஆனி மாதம் 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. பயணங்களைத் தவிர்க்கவும்.

கடகம்

சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே, உங்களுடைய தன ஸ்தானாதிபதி சூரியன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அரசு நிறுவனங்களில் முதலீடுகள் அதிகரிக்கும்.

பண வரவு திருப்தி தருவதாக இருக்கும். இந்த மாதம் பணம் கடன் வாங்குவதையோ கொடுப்பதையோ தவிர்ப்பது நல்லது. மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.

இல்லத்தரசிகளுக்கு இது மகிழ்ச்சியான மாதம் என்றாலும் அவ்வப்போது சோர்வும் களைப்பும் ஏற்படும். உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள்.

மருத்துவர் ஆலோசனை அவசியம். மாத முற்பகுதியில் பணவரவு அதிகமாக இருக்கும். திங்கட்கிழமையன்று சிவ பெருமானை நினைத்து வழிபட நன்மைகள் நடைபெறும். ஆனி 14ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. வீண் பேச்சுக்களைத் தவிர்க்கவும்.

சிம்மம்

உங்க ராசி நாதன் சூரியன் லாப ஸ்தானத்தில் பயணம் செய்வது சிறப்பு. திடீர் பண வருமானம் அதிகரிக்கும். வரவே வராது என்று நினைத்த பணம் உங்களை தேடி வரும். கணவன் மனைவி இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.

அலுவலகத்தில் உங்களின் மதிப்பு மரியாதை கூடும். செய்யும் தொழிலில் எதிர்பார்த்த வளர்ச்சி கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு வீட்டிலும் வெளியிலும் சலுகைகள் கிடைக்கும். வேலை விசயமாக செல்லும் பயணங்களால் நன்மைகள் நடைபெறும்.

உணவு விசயத்திலும் உடல் ஆரோக்கியத்திலும் அக்கறையும் கவனமும் செலுத்துங்கள். ஞாயிறுக்கிழமையன்று சூரிய பகவானை வழிபடுங்கள். ஆனி 16ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை.

கன்னி

உங்க ராசிக்கு தொழில் ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிக்கிறார். பத்தில் சூரியன் பதவி உயர்வை கொடுப்பார். நினைத்த காரியம் நிறைவேறும். அலுவலகத்தில் உங்களின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். பெண்களுக்கு வீட்டில் மதிப்பு மரியாதை கூடும். பிள்ளைகளுக்கு இருந்த பிரச்சினைகள் நீங்கும்.

அலுவலகத்தில் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.

உடல் ஆரோக்கியத்தில் சில பிரச்சினைகள் வந்து மருத்துவ செலவுகள் ஏற்படலாம். அமாவாசை நாளில் குல தெய்வ வழிபாடு செய்யுங்கள் பாதிப்புகள் நீங்கி நன்மை நடைபெறும். ஆனி மாதம் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரைக்கும் உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை.

துலாம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட உங்களுக்கு இந்த மாதம் பாக்ய ஸ்தானத்தில் சூரியன் பயணம் செய்வதால் அதிர்ஷ்டங்கள் தேடி வரும்.

கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். வீட்டிற்கு உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

மதிப்பு மரியாதை அதிகரிக்கும். இந்த மாதம் உங்களுக்கு சுபமான மாதம் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களில் இருந்த தடைகள் நீங்கும்.

சிலருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். மகிழ்ச்சிகரமான செய்திகள் தேடி வரும். ஆனி மாதம் 21ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் பயணங்களைத் தவிர்க்கவும் நிதானமும் கவனமும் தேவை.

துலாம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட உங்களுக்கு இந்த மாதம் பாக்ய ஸ்தானத்தில் சூரியன் பயணம் செய்வதால் அதிர்ஷ்டங்கள் தேடி வரும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும்.

வீட்டிற்கு உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.

இந்த மாதம் உங்களுக்கு சுபமான மாதம் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களில் இருந்த தடைகள் நீங்கும். சிலருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும்.

மகிழ்ச்சிகரமான செய்திகள் தேடி வரும். ஆனி மாதம் 21ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் பயணங்களைத் தவிர்க்கவும் நிதானமும் கவனமும் தேவை.  

விருச்சிகம்

சூரியன் உங்க ராசிக்கு எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். வண்டி வாகனங்களில் போகும் போது கவனமாக இருக்கவும். பண வரவு அதிகரிக்கும் கூடவே சுப செலவுகளும் வரும்.பண விவகாரங்களில் எச்சரிக்கை தேவை.

கணவன் மனைவி இடையே ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் தீரும். தம்பதியர் இடையே நெருக்கம் அதிகரிக்கும். சிலருக்கு புத்திய பாக்கியம் கை கூடி வரும்.

பிள்ளைகள் வழியில் நன்மைகள் நடைபெறும். நல்ல செய்திகள் தேடி வரும். பணம் நகைகள் விலை உயர்ந்த பொருட்களை பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள்.

ஆனி 24ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. இந்த இரண்டு நாட்களில் செய்யும் தொழிலில் முதலீடுகளைத் தவிர்க்கவும்.

தனுசு

சூரியன் ஏழாமிடத்தில் இருக்கிறார் உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையேயான அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையும்,மகிழ்ச்சியும் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

வேலை சாந்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகளால் நன்மை நடக்கும். திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகள் தடைகளுக்குப் பிறகு நன்மையில் முடியும்.

வண்டி வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. பேச்சிலும் கவனம் தேவை. மறைமுக எதிர்ப்புகள் நீங்கும்.

ஆனி மாதம் 26ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. பயணங்களில் நிதானம் தேவை. வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.

மகரம்

சூரியன் ஆறாமிடத்தில் பயணம் செய்கிறார். வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகளுடன் சச்சரவைத் தவிர்க்கவும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணவரவில் இருந்த தடைகள் விலகும்.

அவ்வப்போது மனச்சோர்வு, உடல் சோர்வு ஏற்படும். பெண்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். பணவரவு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. கூடுதல் விழிப்புணர்வு தேவை. கணவன் - மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும்.

இல்லத்தரசிகளுக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். வீட்டில் உள்ளவர்களும் வேலைக்குச் செல்பவர்களும் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

ஆனி 1ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரைக்கும், ஆனி 28 முதல் 31ஆம் தேதி வரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. பயணங்களைத் தவிர்க்கவும். பெரிய அளவில் முதலீடுகள் செய்யாதீர்கள்.

கும்பம்

சூரியன் ஐந்தாமிடத்தில் சுக்கிரன் உடன் பயணம் செய்யப் போகிறார். செழிப்பான காலம். உங்களின் பொருளாதார நிலைமை அற்புதமாக இருக்கும். அரசு அதிகாரிகளின் உதவி கிடைக்கும்.

வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். பண வரவு திருப்தியை தரும். குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் பெருகும். வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும்.

புதிய ஆடை, ஆபரணங்களை வாங்குவீர்கள். புதன் இடமாற்றத்தால புத்திக்கூர்மை அதிகரிக்கும். வேலை மாற்றம், தன லாபம் கிடைக்கும். குடும்பத்தில் குழந்தை பாக்கியம் அமையும்.

ஆரோக்கியத்தில் அக்கறை தேவை, காது மூக்குத் தொண்டைகளில் பிரச்சினைகள் ஏற்படும். உஷ்ணம் தொடர்பான நோய்கள் வரலாம் கவனம் தேவை.

ஆனி 3 ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரைக்கும் ஆனி 31ஆம் தேதி முதல் சந்திராஷ்டமம் உள்ளது. இந்த நாட்களில் செய்யும் செயல்களில் நிதானம் தேவை. முதலீடுகள் செய்யும் முன்பாக முன்யோசனை அவசியம்.

மீனம்

சூரியன் சுக ஸ்தானமான நான்காமிடத்தில் சுக்கிரன் உடன் பயணம் செய்வதால் அப்பாவின் சொத்தில் பங்கு கிடைக்கும். பிள்ளைகளால் தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு உங்களுக்கு இருக்கும்.

சகோதரிகளின் அன்பும் ஆதரவும் உங்களுக்கு மகிழ்ச்சி தரும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

சிலருக்கு வேலையில் எதிர்பார்த்த இடமாறுதல் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சக வியாபாரிகளுடன் இணக்கமாகப் பழகுவது நல்லது.

தேவையான பணம் கிடைக்கும். வீண் செலவு செய்வதை விட்டு விட்டு சிக்கனத்தை கடைபிடித்தால் சேமிக்கலாம். ஆனி 8ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. பயணங்களைத் தவிர்த்து விடவும்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US