உலகக்கிண்ணத்தை வென்ற பாகிஸ்தான் வேகப்புயலை பயிற்சியாளராக நியமித்த இலங்கை! CEOவின் அதிரடி அறிவிப்பு
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஆகிப் ஜாவித் நியமிக்கப்பட்டுள்ளார்.
வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர்
ஐசிசி டி20 தொடர் சூன் மாதம் நடைபெற உள்ள நிலையில், இலங்கை கிரிக்கெட் வாரியம் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளரை நியமித்துள்ளது.
பாகிஸ்தான் அணிக்காக 1988 முதல் 1998ஆம் ஆண்டு வரை விளையாடிய ஆகிப் ஜாவித் (Aaqib Javed) பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவர் பாகிஸ்தான் அணிக்காக 22 போட்டிகளில் 54 விக்கெட்டுகளும், 163 ஒருநாள் போட்டிகளில் 182 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார்.
குறிப்பாக ஒருநாள் போட்டியில் 7/37 என்பது இவரது சிறந்த பந்துவீச்சு ஆகும். 1992ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணியில் இவர் இடம்பெற்றிருந்தார்.
உலகக்கோப்பையை வென்ற பாகிஸ்தான்
ஓய்வுக்கு பின்னர் பாகிஸ்தான் தேசிய அணி, ஐக்கிய அரபு அமீரகம், ஆப்கானிஸ்தான் அணிகளின் பயிற்சியாளராக இவர் பணியாற்றியுள்ளார்.
அத்துடன் 2009யில் உலகக்கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் ஜாவித் செயல்பட்டிருந்தார்.
ஆகிப் ஜாவித்தின் நியமனம் குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ஆஷ்லே டி சில்வா கூறுகையில்,
''நாங்கள் ஆகிப்பை அன்புடன் வரவேற்கிறோம் மற்றும் அவரது மகத்தான சர்வதேச அனுபவம், விளையாடுதல் மற்றும் பயிற்சி ஆகியவற்றில், எங்கள் பந்துவீச்சாளர்கள் ICC ஆடவர் டி20 உலகக்கோப்பை போன்ற வரவிருக்கும் முக்கிய சர்வதேச போட்டிகளுக்கு முன்னதாக நல்ல நிலைக்கு வர உதவும் என்று நம்புகிறோம்'' என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |