உலகக்கோப்பையில் வாணவேடிக்கை காட்டிய அவுஸ்திரேலிய கேப்டன்!
ஆரோன் பின்ச்சிற்கு இது 19வது சர்வதேச டி20 அரைசதம் ஆகும்
பின்ச் 103 போட்டிகளில் 2 சதம், 19 அரைசதங்களுடன் 3120 ஓட்டங்கள் குவித்துள்ளார்
அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் 63 ஓட்டங்கள் விளாசினார்.
அவுஸ்திரேலியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை டி20 போட்டி பிரிஸ்பேனில் நடந்து வருகிறது.
முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ஓட்டங்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் சிக்ஸர்களை பறக்கவிட்டு வாணவேடிக்கை காட்டினார்.
Twitter (@ICC)
44 பந்துகளை எதிர்கொண்ட பின்ச் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 63 ஓட்டங்கள் விளாசினார்.
Aaron Finch brings up a wonderful half-century ?#T20WorldCup | #AUSvIRE | ?: https://t.co/CW4eQlDZGZ pic.twitter.com/5qXGfVhmug
— ICC (@ICC) October 31, 2022