தனது கடைசி போட்டியில் கிளீன் போல்டான அவுஸ்திரேலிய கேப்டன்! பிரியாவிடை கொடுத்த ரசிகர்களின் வீடியோ
கடைசி ஒருநாள் போட்டியில் ஆரோன் பின்சை போல்டாக்கிய சௌதீ
ஆரோன் பின்ச் 146 ஒருநாள் போட்டிகளில் 17 சதங்களுடன் 5406 ஓட்டங்ள் குவித்துள்ளார்
அவுஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் தனது கடைசி ஒருநாள் போட்டியில் 5 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அவுஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தனது கடைசி ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து எதிராக இன்று பின்ச் களமிறங்கினார்.
The end of an era.
— cricket.com.au (@cricketcomau) September 11, 2022
Aaron Finch walks off to a standing ovation ??#AUSvNZ pic.twitter.com/gi1W6fwBpb
மொத்தம் 13 பந்துகளை சந்தித்த பின்ச் 5 ஓட்டங்கள் மட்டுமே எடுத்த நிலையில் சௌதி ஓவரில் கிளீன் போல்டனார். இதனால் பெருத்த ஏமாற்றத்துடன் அவர் மைதானத்தை விட்டு வெளியேறினார்.
எனினும் அவரது ரசிகர்கள் பிரியாவிடை அளித்தனர். இதுதொடர்பான வீடியோவை அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
Twitter / ICC